Dogs
Dogs

தூக்கில் ஏற்றப்பட்ட நாய்கள்… 20 பேர் மீது வழக்குப்பதிவு!

Published on

திருப்பூரில் நாய்களை மரத்தில் தூக்கி ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களை தூக்கில் ஏற்றும் தண்டனையே சட்டத்தின் கையில் உள்ளது. இதனை மனிதர்கள் அரங்கேற்றினாலே, சட்டம் அவர்கள் மீது பாயும். மேலும் இது ஒரு பெரிய குற்றமாகவும், பாவமாகவும் பார்க்கப்படும். அப்படியிருக்கும்போது நம்மைவிட குறைந்த அறிவைக் கொண்ட நாய்களை தூக்கில் ஏற்றியது மனித நேயத்திற்கே கேள்விக்குறியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், பிராணிகள் வதை தடுப்பு அலுவலகத்திற்கு ஒரு புகார் எடுத்து வந்தார். அதாவது, கிட்டுசாமி என்பவரின் வளர்ப்பு நாய்கள் இரண்டு மற்றும் தெருநாய்கள் இரண்டு என மொத்தம் 4 நாய்களை மரத்தில் தூக்கில் ஏற்றி கொலை செய்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 20 பேர் சேர்ந்து இதனை செய்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த நாய்களைத் தூக்கிலேற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த புகாரின் பேரில் அந்த 20 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புகார் அளிக்க வந்த நாகராஜ் பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினர் என்பதால், இந்த வழக்கு மேலும் வலுவாகியுள்ளது.

எதற்காக அவர்கள் அப்படிச் செய்தனர்? அந்த நாய்கள் என்ன செய்தன? உரிமையாளர் இதுகுறித்து என்ன கூறினார்? அவர் என்ன செய்தார்? என்பதுபோன்ற அனைத்து தகவலும் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிரடியாக கைது செய்யப்பட்ட Telegram CEO… 20 ஆண்டுகள் சிறை? 
Dogs

எது எப்படி ஆயினும்? தூக்கில் ஏற்றும் அளவிற்கு அந்த நாய்கள் என்ன செய்தன? பேச முடியாது என்பதற்காக நியாயம் பார்க்காமல் தண்டனை வழங்குவதா? அல்லது யார் கேட்கப்போகிறார்கள் என்று மரண தண்டனை வழங்குவதா?

நாய்கள் தொல்லைக் கொடுத்தால், அதற்கான புகாரை அளித்து நாய்களை பிடித்துச் செல்ல செய்திருக்கலாமே?

இங்கு கொலை செய்யப்பட்டது நாய்களா? அல்லது மனிதமா?

logo
Kalki Online
kalkionline.com