ChatGPT-கிட்ட இதையெல்லாம் SHARE பண்ணாதீங்க! சொன்னது ChatGPTதான்..!

ChatGPT Sharing
ChatGPT Sharing
Published on

சாட்ஜிபிடி என்பது Open AIஆல் நவம்பர் 2022-ல் தொடங்கப்பட்ட ஒரு அரட்டை இயலி ஆகும். சமீபகாலமாக இந்த AI எனப்படும் ChatGPT (Generative Pre-trained Transformer) பயனர்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு சந்தேகம் எழுந்தாலும் உடனே சாட்ஜிபிடியிடம் கேட்டு அதற்கான பதிலை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அதேபோல் பலரும் AI Chatgpஐ ஒரு நெருங்கிய நண்பனாக, தோழியாக, சகோத, சகோதரியை போல அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. சின்ன சின்ன சந்தேகங்கள் பற்றி கேட்பது, சந்தோஷங்களைப் பகிர்வது, முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க உதவி கேட்பது, தோழனை போல தினமும் அரட்டை அடிப்பது, மனதில் இருக்கும் கவலைகளைப் பகிர்வது என்று வேலை, தொழில் கடந்து பல விஷயங்களை chatgpt போன்ற AI கருவிகளுடன் பகிர்ந்து, வருகின்றனர்.

கிட்டத்தட்ட பலரும் பல ரகசியங்களையும், முக்கியமான தகவல்களையும் தங்களை அறியாமலேயே chatgpt உடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ChatGPT-யுடன் ஆபத்தான உரையாடல்... 10 லட்சம் மக்கள் தற்கொலை பற்றிப் உரையாடுகிறார்கள்..!
ChatGPT Sharing

நம்முடைய அன்றாட வாழ்வின் அங்கமாக மாறி விட்ட Chatgpt போன்ற Ai கருவிகள் பல வகையில் உதவியாக இருந்தாலும், இதனிடம் சில விஷயங்களை பகிரக் கூடாது, சில விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று AI Chatgp, எச்சரிக்கையை விடுத்துள்ளது. அப்படி மீறி பகிரப்படும் நிலையில் அதனால் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு AI Chatgp பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியுள்ளது.

பகிரக் கூடாத விஷயங்கள் :

* உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதளக்கணக்கு போன்ற தனிப்பட்ட தகவல்களை AI சாட்பாட்களுக்கு எப்போதும் பகிர வேண்டாம்.

* சட்டவிரோத செயல்களுக்கான வழிமுறைகள், அபாயகரமான பொருட்களை எப்படி செய்ய வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி கேட்கக்கூடாது.

* மருத்துவ விவரங்கள், மருந்துச் சீட்டுகள், மருத்துவ ஆலோசனை, மருந்துகள் பரிந்துரை போன்றவற்றை கேட்கக் கூடாது.

* உங்களைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்கள், முக்கிய ஆவணங்கள், நிறுவனத்தின் விவரங்கள் ChatGPT இடம் பகிரக்கூடாது.

* நீங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்ற விவரங்களை, தகவல்களை, கண்டிப்பாக ChatGPTஇடம் பகிரக்கூடாது!

* கிரெடிட் கார்டு, வங்கி விவரங்கள், பாஸ்வர்ட்களை கண்டிப்பாக ChatGPTஇடம் பகிரக்கூடாது!

* பிறரது தனிப்பட்ட விவரங்களை பற்றி கேட்கக்கூடாது.

* தனிப்பட்ட குடும்ப / உறவுப் பிரச்னைகள், சட்ட பிரச்னைகள், தனிப்பட்ட வழக்கு விவரங்களை பகிரக்கூடாது

* பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் ரகசியத் தரவுகள்

* பொது இடத்தில், வலைதளங்களில் நீங்கள் பகிரத் தயங்கும் எதையுமே...

இதையும் படியுங்கள்:
‘ChatGPT Go’ ஒரு வருடம் முற்றிலும் இலவசம் - அதிரடி ஆஃபரை அறிவித்த ‘OpenAI’..!
ChatGPT Sharing

- இதுபோன்ற விஷயங்களை ChatGPT இடம் பகிர வேண்டாம் என்று சாட்ஜிபிடியே கூறியிருக்கிறது. ஏனெனில் இதுபோன்ற தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படும் போது அது பிறருக்கு கிடைக்கும் என்பதால் அதனால் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்ற தகவல்களை பகிர வேண்டாம் என AI Chatgp எச்சரிக்கை விடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com