‘ChatGPT Go’ ஒரு வருடம் முற்றிலும் இலவசம் - அதிரடி ஆஃபரை அறிவித்த ‘OpenAI’..!

ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் 12 மாதங்களுக்கான ChatGPT Go சந்தாவை OpenAI நிறுவனம் கொடுக்க இருக்கிறது.
Chatgpt
Chatgpt
Published on

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் இன்று மனிதர்களின் அறிவையும், கற்றல் திறனையும், பாடங்கள் பயிற்றுவிப்பதிலும், பெரிய பெரிய ஆராய்ச்சிகளையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த Chat GPT என்றழைக்கப்படும் சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ - டிரெயிண்ட் டிரான்ஸ்ஃபார்மர். அந்த வகையில் Chat GPT என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். அதனால் மனிதர்கள் பேசும் மொழியைப் புரிந்து கொண்டு, அதே சொற்களைப் பயன்படுத்தி பதிலளிக்க முடியும். அதாவது, நாம் கொடுக்கும் உள்ளீட்டைப் புரிந்து கொண்டு, இயற்கையான மொழியில் சொற்களைக் கோர்த்து விடை கொடுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் இந்த ஜி பி டி.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருக்கும் OpenAI, இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் தனது பயனர்களை அதிகரிக்கவும், கூகுள் ஜெமினி, பர்பிளெக்ஸ் சிட்டி ஏ.ஐ. ஆகிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க Chat GPT புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
Chat GPTக்கு இணையான வேறு சில AI நுண்ணறிவு கருவிகள்...
Chatgpt

OpenAI மதிப்பீடுகளின்படி, ChatGPT-ஐ தற்போது வாரத்திற்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி வருகிற 4-ந் தேதி முதல் Chat GPT யின் அதிநவீன ‘GO’ பதிப்பை 1 ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்போவதாக அதன் தாய் நிறுவனமான OpenAI அறிவித்துள்ளது. மாதம் ரூ.1,999 கட்டணமாக பெறப்படும் Chat GPT யின் பிரீமியம் பதிப்புக்கு அடுத்தபடியாக மாதம் ரூ.399 கட்டணத்துடன் ChatGPT Go சேவை வழங்கப்படுகிறது. தற்போது இதனை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 4-ந் தேதி முதல் புதிதாக இணையும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

தற்போது சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.1,999ஆகவும், சாட்ஜிபிடி ப்ரோ (ChatGPT Pro) திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.19,900ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தான் Chat GPT அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் அதிகளவில் புதிய யூசர்களை கொண்டுவர வேண்டும் என்பதால், ஓப்பன்ஏஐ நிறுவனம் இதை செய்வது தெரிகிறது. ChatGPT Go என்பது சமீபத்தில் OpenAI ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டமாகும். இதன் மூலம், ChatGPT இன் அதிநவீன GPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
Chatgpt Go: மாதம் 399ரூ பே பண்ணா போதும்… புதிய சந்தா திட்டம் அறிமுகம்..!
Chatgpt

இலவமாக கொடுக்கப்படும் வெர்ஷனை மட்டும் யூசர்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களை Chat GPT GO திட்டத்துக்கு மாற்ற இந்த 12 மாத இலவச சலுகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த சாந்தா திட்டம் முதன்முதலில் களம் இறக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 4-ம்தேதி முதல் 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றே சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com