இனிமே இப்படியெல்லாம் வராதீங்க விஜய்....ஜேம்ஸ் வசந்தன்!

விஜய்
விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் வருகை தந்த விதம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது அதிரடி கருத்தினை தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் முக்கிய பல விவிஐபிகளும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர் .

வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் , சூட் மற்றும் டிப் டாப்பான உடைகளை விஜய் அணிந்து வருவதே வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசை வெளியீட்டிற்கு மிக எளிமையாக வந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில் இதுபற்றி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பர பரப்பாக பேசப்பது வருகிறது.

Actor vijay
Actor vijay

இது குறித்து “வாரிசு பட விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்றவாறு உடைஅணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்” என்று ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை என்பது உண்டு தானே? நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபட்ச கதாநாயகர்கள் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். இது தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com