ஒரே நாளில் ‘இரட்டை’ இடி! தங்கம் மற்றும் சிலிண்டர் விலை தடாலடி உயர்வு..!

gas and gold price
gas and gold price
Published on

இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு புறம் சிலிண்டர் விலை ஏற்றம் மக்களை கவலை அடைய செய்த நிலையில் மறுபுறம் தங்கமும் தன் பங்கிற்கு விலையை உயர்த்தியுள்ளது.

இஸ்ரேல் -ஈரான் போர் காரணமாக உலக நாடுகளிடையே வர்த்தக பிரச்சனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில் கடல் வழி வணிகத்தில் சிக்கல் ஏற்படும் என பல்வேறு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. கச்சா வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிலிண்டர் விலை, நள்ளிரவு முதல் உயர்வு கண்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ.928.50 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ. 2043.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாகவும், டெல்லியில் 913 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை 2,043.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 1,883 ரூபாயாகவும், மும்பையில் 1,835 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 1ம் தேதி 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட சூழலில், தற்போதை விலை ஏற்றத்துடன் சேர்த்து வணிக சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாய் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை :

போர் நடைபெற்றால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுக்கும் நோக்கில், தங்கத்தின் மீது முதலீடு செய்வர். இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது மக்களிடையே கவலை அடைய செய்துள்ளது

தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 15,465 ரூபாய்க்கும், சவரன், 1,23,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 265 ரூபாய் குறைந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,120 ரூபாய் சரிவடைந்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது.

தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ 2.95 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் மார்ச் 6ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் சரிந்து ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2.90 லட்சத்திற்கு விற்பனை ஆனது

இந்நிலையில் இன்று (மார்ச் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்த நிலையில், வார இறுதி நாளான இன்று 720 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இதையும் படியுங்கள்:
சனிப்பெயர்ச்சி 2026: மீன ராசிக்கு மாறும் சனி பகவான்! யாருக்கு யோகம்? யாருக்கு சோதனை? முழு விளக்கம்!
gas and gold price

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com