சனிப்பெயர்ச்சி 2026: மீன ராசிக்கு மாறும் சனி பகவான்! யாருக்கு யோகம்? யாருக்கு சோதனை? முழு விளக்கம்!

இன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் பயனாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதை எளிமையாகக் கீழே காணலாம்.
Sani Bhagavan
Sani Bhagavan
Published on

2026-ம் ஆண்டில் மிக முக்கியமான கிரகப்பெயர்ச்சியாக பார்க்கப்படக்கூடிய சனிபகவானுடைய பெயர்ச்சி விஸ்வாவசு ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 6-ம்தேதி) நடைபெறுகிறது. இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான் தற்போது இருக்கக்கூடிய கும்ப ராசியில் இருந்து தனது அடுத்த வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி உள்ள ராசிகள் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன் படி, மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடக்கமும், சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கன்னி ராசிக்கு கண்டக சனியும் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக ஏழரை சனி யாருகெல்லாம் முடிகிறது, அஷ்டம சனி யாருக்கெல்லாம் தொடங்குகிறது, அர்த்தாஷ்டம சனி யாருக்கு தொடங்குது, யாருக்கு முடியுது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..

இதையும் படியுங்கள்:
நாளை (மார்ச் 6) திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் சனீஸ்வரர் - முழு விபரங்கள்!
Sani Bhagavan

* ஏழரை நாட்டு சனி கிட்டத்தட்ட கடைசி 8 வருடமாக, அதாவது ஏழரை வருடம் என்பது ஒரு 6 மாதம் சேர்த்தே 8 வருடமாக நடந்து கொண்டிருந்த மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முழுமையாக 2026 மார்ச் மாதம் 6-ம்தேதியுடன் (இன்றுடன்) முடிகிறது. அதோடு இது சகாய ஸ்தானமும் கூட என்பதால், உங்கள் எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் வரும்.

* இன்று முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு சிரசு சனியாக ஏழரை சனி யாருக்கு தொடங்குகிறது. முதல் 2 வருடம் சனி பகவான் சிரசில் இருந்து அவர்களுக்கு ஏழரை சனியாக இருப்பார்.

* அதேபோல் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிகிறது. கிட்டத்தட்ட கடைசி ஒரு மூணு வருடத்தில் பல நெருக்கடி, அழுத்தத்தை கொடுத்து கடக ராசிக்காரர் களின் வாழ்க்கையை புரட்டி எடுத்த சனி பகவான் முழுமையாக அவர்களை விட்டு விலகுகிறார்.

* மார்ச் 6-ம்தேதிக்கு பிறகு (இன்று) சிம்ம ராசிக்காரர் களுக்கு அஷ்டமத்தில் சனி பகவான் வருகிறார். அந்த வகையில் அஷ்டம சனி அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு சிம்ம ராசிக்கு தொடங்குதுன்னு சொல்லலாம். அஷ்டம சனி என்பது பயப்பட வேண்டியது அல்ல, இது கர்ம வினைகளைக் கழித்து, வாழ்க்கையில் முதிர்ச்சியைத் தரும். அதேசமயம் பொறுப்பு உணர்வும், பொறுமையும் இருந்தால் அஷ்டம சனியாலும் உங்களுக்கு கஷ்டங்கள் வராது.

* அர்த்தாஷ்டம சனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு முழுமையாக முடிகிறது. கிட்டத்தட்ட கடைசி இரண்டரை ஆண்டுகளாக ராசிக்கு 4-ல் இருந்த சனி பகவான் அஞ்சாவது இடத்திற்கு போகிறார்.

* தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது. மூன்றில் இருந்த சனி பகவான் 4-வது இடத்திற்கு வருகிறார். வரும் இரண்டரை வருடங்கள் அர்த்தாஷ்டமத்தில் சனி இருக்கிற காலம் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டிய காலமாகும். அதேசமயம், அமைதியும், நிதானமும் இருந்தால் அனைத்திலும் நல்லதே நடக்கும்.

* கண்டக சனி யாருக்கு முடிகிறது என்றால், சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டகத்து சனி முடிகிறது. கண்டக சனி என்பது துன்பத்தை மட்டும் தராமல், வாழ்க்கையில் ஒரு பாடம் கற்றுக்கொடுத்து, பொறுப்புடன் செயல்பட வைக்கும் காலமாகவும் கருதப்படுகிறது.

* கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டக சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கும் ஆறாமிடத்துக்கும் உரியவரான சனிபகவான், இப்போது ஏழாமிடத்துக்குச் செல்கிறார். ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். அதோடு கண்டக ஸ்தானமும்கூட. எனவே குடும்பத்தில் மட்டும் அனுசரித்துச் சென்றால், மற்றவை யாவும் அனுகூலமாகவே இருக்கும்.

* லாப சனியாக யாருக்கு வருகிறது என்றால், ரிஷப ராசிக்காரர்களுக்கு லாப சனி உருவாக போகுது. இந்த லாப சனி ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய வெற்றியை தரக்கூடியதாக இருக்கும்.

* கர்ம சனி யாருக்கு வருகிறது என்றால் மிதுன ராசிக்காரர்களுக்கு 10-வது இடத்தில் சனி வருவதால் அவர்களுடைய பாவ கர்மங்கள் எல்லாமும் விலகி முக்கியமாக அவர்கள் செய்த புண்ணிய கர்மாக்கள் எல்லாம் வேலை செய்யும். கர்ம ஸ்தானத்தில் சனி வந்தா நீங்க எதெல்லாம் நல்லது பண்ணீங்களோ அதன் அடிப்படையில் நல்லது நடக்கும். கெட்ட விஷயங்கள் எதெல்லாம் பண்ணீங்களோ அதுக்குரிய தண்டனையையும் அந்த காலகட்டத்தில் சனி பகவான் கொடுப்பார்.

இதையும் படியுங்கள்:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழா - இந்த ஆண்டா? அடுத்த ஆண்டா?
Sani Bhagavan

மேற்சொன்ன இந்த விஷயங்கள்தான் இந்தந்த ராசிக்காரர்களுக்கு சனியாக வரப்போகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com