போதைப் பொருள் தடுப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்னெடுப்பு!

Drug prevention
Cool Lip
Published on

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் தொடங்கி இளைய பருவத்தினர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதில் மது, கஞ்சா ஆகியவற்றை பயன்படுத்தும் போது வெளியே தெரிந்து விட வாய்ப்பு உள்ளது. ஆனால் யாருக்கும் தெரியாமல் போதையில் இருப்பதற்காக 'கூல் லிப்' என்ற ஒரு வஸ்துவை பயன்படுத்தி வருகின்றனர். இதை உதட்டுக்கு கீழே வைத்துக் கொண்டால் போதும். குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு 'கிர்' என இருக்கும். இது பழகும் மாணவர்களுக்கு முதலில் சொல்வது, இதை வாயில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு குழப்பமும் இன்றி நன்கு படிக்கலாம் என்பதாகும். இதைக் கேட்கும் பல பல மாணவர்கள் நன்கு படிக்கலாம் என்ற ஒரே வார்த்தைக்காக விளையாட்டாக 'கூல் லிப்'பை பயன்படுத்த தொடங்கி இப்போது அதை விட முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து பெரும்பாலான பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை

'கூல் லிப்' உபயோகப்படுத்துவதால் மாணவர்களின் யோசிப்புத் திறன் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போகிறது. இந்நிலையில் ஹை கோர்ட் மதுரை கிளையில் நேற்று முன் தினம் இது தொடர்பாக நடந்த வழக்கு ஒன்றில், 'கூல் லிப்' போன்ற போதை வஸ்துகள் இளைஞர்களை மிகவும் நாசப்படுத்தி வருகின்றது. அதனால் மாணவர்களின் யோசிப்புத் தன்மை உட்பட பல பாசிட்டிவான விஷயங்கள் மெல்ல மெல்ல குறைந்து போகின்றன. இதனால் நாடு முழுவதும் இதை ஏன் தடை செய்யக்கூடாது? எனக் கேட்டுள்ளது.

இந்த கேள்வியில் ஒரு பெரிய உண்மை அடங்கியுள்ளது. நம் நாட்டில் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நடைமுறைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு பொருள் தடை செய்யப்பட்டு இருந்தால், அந்தப் பொருள் பக்கத்து மாநிலங்களில் தாராளமாக கிடைக்க கூடியதாக உள்ளது. அதனால் அந்த தடை செய்யப்பட்ட பொருள், தடையில்லா மாநிலத்தில் இருந்து நம் மாநிலத்துக்கு கடத்திவரப்பட்டு, கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இது போன்ற பொருட்களில் போலிகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு குட்கா வகை பெங்களூரிலிருந்து அதிகளவு இங்கு கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த குட்கா வில் அதிக அளவு மண் கலந்தும் விற்பனைசெய்யப்படுகிறது. இதுதான் போலி. குட்கா போன்ற போதை பொருளை நேரடியாக பயன்படுத்தினாலும் மரணம் தான். இதை கருத்தில் கொண்டு போதைப்பொருட்களை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க தயாராகும் நாசா!
Drug prevention

இதை ஒரு நல்ல ஆரம்பமாக கொண்டு அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் ஒருசேர இணைந்து உச்ச நீதிமன்றம் மூலமாக இளைய சமுதாயத்தை சீரழித்து வரும் இது போன்ற புகையிலை போதை வஸ்துகளை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால இளைஞர் சமுதாயம் தலை நிமிர்ந்த சமுதாயமாக இருக்கும். இல்லையெனில் குழந்தை பிறப்புக்காக செயற்கை கருவூட்டல் மையங்களில் தான் கால் கடுக்க நிற்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com