#BIG NEWS : ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM எந்திரம் பறிமுதல்..!

டம்மி EVM
டம்மி EVMSource: polimernews
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் 100 அடி சாலை அருகே நேற்று இரவு 11 மணி அளவில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்த பொழுது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை இட்டதில் அதில் 5 பார்சல்கள் கொண்ட பெட்டிகளை சோதனையிட்ட பொழுது அதில் தெர்மாகோலால் தயாரிக்கப்பட்ட போலி மின்னணு வாக்கு இயந்திரங்களும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 100 டம்மி மின்னணு வாக்கு இயந்திரங்களும் இருந்தன. டம்மி இயந்திரங்கள் பேட்டரி மூலம் இயங்கும் வகையிலும், பட்டனை அழுத்தினால் 'பீப்' சத்தம் வரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவை வடபழனியிலிருந்து கோயம்பேடு வழியாக பார்சல் சர்வீஸ் மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்ப திட்டமிட்டது என்று கண்டறியப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதி வேட்பாளரின் புகைப்படம், ஸ்டிக்கர்கள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசிட்டிங் கார்டுகள், டம்மி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அண்ணாநகர் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com