ஆஃப்கானிஸ்தானில் நிலநடுக்கம்… மக்களின் கதி என்ன?

Afghanistan
Afghanistan

தாலிபன்கள் ஆட்சி செய்யும் ஆஃப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் குலுங்கின. திடீரென்று ஏற்பட்ட அதிர்வால், ஆஃப்கானிஸ்தான் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தாண்டு சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜப்பானின் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 9 பேர் பலியாகினர். இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியிலும் நியூ ஜெர்ஸி பகுதியிலும் திடீரென்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நியூயார்க் பகுதியில் 4.8 ரிக்டர் அளவும் நியூ ஜெர்ஸியில் 5.5 ரிக்டர் அளவும் பதிவாகின. இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்தியாவிலும் சில இடங்களில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

அந்தவகையில் இன்று நள்ளிரவு 2.15 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை இன்னும் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தாலிபான்களின் பல்வேறு கொடூரமான கட்டுப்பாடுகளால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

கட்டடங்கள் குலுங்கின என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. மற்றப்படி உயிரிழப்புகள் உள்ளதா? கட்டடங்கள் எதுவும் அடியோடு சேதமடைந்துள்ளதா? என்பதெல்லாம் தெரியவில்லை. ஏனெனில், 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
மலைப்பாம்பினால் உயிருடன் விழுங்கப்பட்ட பெண்… இந்தோனேஷியாவில் பரபரப்பு! 
Afghanistan

ஆஃப்கானிஸ்தானில் அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்கூட பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்டோபர் 7 ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். மேலும் பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த துயரில் இருந்து படிப்படியாக ஆப்கானிஸ்தான் மீண்டு வரும் நிலையில் தான் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com