தெலங்கானா ஆந்திரா ஆகிய பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த செய்திதான் தற்போது எக்ஸ் தளத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா, விசாகப்பட்டிணம், ஜக்கையாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி விழுந்தன. மற்றும் செவுறுகளில் விரிசல் போன்றவை ஏற்பட்டன. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்திருக்கின்றனர்.
ஆந்திரா மட்டுமல்லாமல் தெலங்கானாவிலும் ஐதராபாத், கம்பம், ரங்கார ரெட்டி, வாரங்கல் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், ஹயாத் நகர், அப்துல்லாபூர், ரணுகொண்டா, நகுல வஞ்சா போன்ற பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது.
இதில் சில இடங்களில் அந்தளவிற்கு பாதிப்புகள் இல்லை என்றாலும், பல இடங்களில் பொருட்கள் சேதம், விரிசல் ஆகியவை ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
இதனையடுத்து இதுபோன்ற நிலநடுக்கம் மற்றும் இதைவிட அடுத்தக்கட்ட நிலநடுக்கம் ஆகியவற்றிற்கு விழிப்புணர்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல் நிலநடுக்கம் குறித்து அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தின் அளவு கணக்கெடுக்கப்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.27 மணியளவில் நடந்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அளவைவிட மிகவும் அதிகமாக குளிர் இருக்கும் என்றும் செய்திகள் வந்தன. இதற்கு முக்கிய காரணம் எல் நினா நிகழ்வு. இந்த நிகழ்வு ஏற்பட்டால் எப்போதும் வழக்கத்திற்கான மாறான காலநிலைதான் ஏற்படும். மேலும் இந்த நிகழ்வால் இந்தாண்டு முதல் பாதியில் சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகள் மிகவும் கஷ்டப்பட்டன. இதனையடுத்து ஆண்டு இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவதிக்குள்ளாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.