இன்று முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை..!

2026, 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ec
ec
Published on

இந்தியா முழுவதும் ஐந்து மாநிலங்களில் ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல்கள் களைகட்டியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம்தேதி தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று(ஏப்ரல் 9-ம்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்திற்கு 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் இணைந்து ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடத்தப்பட உள்ளன.

தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இது கடந்த இறுதி வேட்பாளர் பட்டியலை விட 6 லட்சத்து 35 ஆயிரத்து 911 வாக்காளர்களை கூடுதலாக கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐந்து மாநிலங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை மணியா?
ec

வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம்தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 4918 வேட்பு மனுக்கள் ஏற்ப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசிநாளாகும். இன்று மாலையே இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

இந்தத் தேர்தல்களை நியாயமான முறையில் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், நடத்தை விதிகளையும் மிகக் கடுமையாக அமல்படுத்தியுள்ளது.

‘யாருக்கு உங்கள் வாக்கு’ என்று அரசியல் கட்சிகள் பெயரை குறிப்பிட்டு கருத்து சொல்ல பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சிலர் பயன்படுத்துவது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக தேர்தல் நடைபெறும் காலங்களில் வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையிலான கருத்துக்கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான தடையை விதித்துள்ளது.

அதன்படி இன்று (ஏப்.9)காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை எந்தவொரு ஊடகமோ அல்லது அமைப்போ தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) நடத்தவோ அல்லது அவற்றை வெளியிடவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

ஏனெனில் இன்று புதுச்சேரி, அசாம், கேரளா மாநிலங்களில் தொடங்கும் வாக்குப்பதிவு வரும் 29-ம்தேதி அன்று மேற்கு வங்காள தேர்தல் வாக்குப்பதிவுடன் முடிவடைகிறது. எனவே இன்று முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் கருத்துக்கணிப்பு நடத்துவது அல்லது அவற்றை வெளியிடுவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 126-ஏ பிரிவை மீறுவது ஆகும். இதற்கு, 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்’ என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் 9 முதல் 29 வரை 'நோ' கருத்துக்கணிப்பு - மீறினால் 2 ஆண்டு சிறை?
ec

தேர்தலின் நம்பகத்தன்மையைக் காக்க இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com