பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளில் முன்னிலை யார்.? முழு தகவல்கள் இதோ.!

2026 election Counting
Election Counting
Updated on

தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று கொண்டிருக்கிறது.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மொத்தமாக 4,87,98,833 வாக்குகள் பதிவாகி உள்ளன.

தபால் வாக்குகளைப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது. எப்போதும் தபால் வாக்குகளை பொருத்தவரை திமுக மற்றும் அதிமுகவே முன்னிலை வகிப்பார்கள். ஆனால் இம்முறை திராவிட கட்சி அல்லாத தமிழக வெற்றிக் கழகம் தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலையில் உள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் முன்னிலை வகிக்கிறார்கள். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலை வகிக்கிறார்.

திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி முன்னிலையில் உள்ளார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் முன்னிலை.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் பின்னடைவு. ஆனால் பெரம்பூர் தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு

பெரம்பூர் தொகுதியில் திமுக முகவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என அதிமுக, தவெக முகவர்கள் இணைந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாநகரில் தபால் வாக்கு பெட்டிகள் திறந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை.திமுக பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்றுள்ளது.திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பின்னடைவு

துறைமுகம் தொகுதியில் சேகர் பாபு தபால் வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்

சேலம் வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேந்திர முன்னிலையில் இருக்கிறார்

ராயபுரம் தொகுதியில் தவெக முன்னிலை

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவிற்கு பின்னடைவு

மதுரை மேற்கு தொகுதியில் திமுக முன்னிலை

ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி முன்னிலை

ஆலந்தூரில் திமுக முன்னிலை

இதையும் படியுங்கள்:
118-ஐ தொடப் போவது யார்? இது நடந்தால் மறு தேர்தல் தான்.! காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.!
2026 election Counting

தபால் வாக்கு முடிவுகளைப் பொறுத்தவரை திமுக 46, அதிமுக 18, தவெக 7 தொகுதிகளில் முன்னிலை.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தற்போது வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
2026 election Counting
logo
Kalki Online
kalkionline.com