3 மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு..!

election campaign
election campaign
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

பரபரப்பான அரசியல் சூழலில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முதல் கட்டமாக  அசாம், கேரளா , புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான, தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை மறுநாள் (ஏப்ரல்.9) வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே, அனைத்து வகையான பிரச்சாரங்களையும் முடித்து விட வேண்டும். இதனால், இன்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை இன்றுடன் நிறைவு செய்தனர்.

தேர்தல் கள நிலவரம்: 

இறுதி கட்ட கள நிலவரங்களின்படி 3 மாநிலங்களிலும் உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:

​அசாம்: எல்லையோர அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

​கேரளா: இந்த மாநிலத்தில் மொத்தம் 140 தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

​புதுச்சேரி: துணைநிலை மாநில அந்தஸ்து பெற்ற புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
எங்கள் நாட்டின் யுரேனியத்தை திருட திட்டமிடுகிறது அமெரிக்கா- ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு..!
election campaign
logo
Kalki Online
kalkionline.com