#JUST IN : எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு..! தமிழகத்தின் 6 இடங்களை பிடிக்கப்போவது யார்?

Election commission
Election commission
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்யசபா எம்பி (Rajya Sabha MP) பதவி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. காரணம் மாநிலங்களின் பிரதிநிதியாக தங்கள் தேவைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறி மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரத்துடன், சட்ட மசோதாக்கள் (Bills) ஆய்வு மற்றும் விவாதங்களில் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை வலியுறுத்துவது மற்றும் நிதி மசோதாக்களில் (Money Bill) பரிந்துரை செய்யும் தகுதி என மக்கள் நலனுக்காக இயங்கும் அரசியல் அதிகாரப் பணியாக எம்பி பதவி உள்ளது.

ராஜ்யசபா எம்பிக்கள் கட்சி பாகுபாடின்றி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மூலம் அறிவுறுத்தப்பட்ட வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்படுவர்.

கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை துறையில் சிறந்தவர்களை குடியரசுத் தலைவரும் நியமனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

238 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து அதிகபட்சம் 250.ஊறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு 6 வருடங்கள் பதவி வகிப்பார்கள். இடையில் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலும் ராஜ்யசபா கலைக்கப்படாது (permanent house).என்பது சிறப்பு.

இந்நிலையில் தமிழக ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது எம்பிக்களாக பதவி வகிக்கும் திமுகவின் என் ஆர் இளங்கோ, டாக்டர் கனிமொழி , திருச்சி சிவா, சோமு செல்வராஜ் மற்றும் தமாகாவின் ஜி கே வாசன், அதிமுகவின் தம்பிதுரை ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநிலங்களவை எம் பி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி துவங்கி மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து மார்ச் 9ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் போட்டி இருக்கும் பட்சத்தில் மார்ச் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் போட்டியிருந்து தேர்தல் நடைபெற்றால் மார்ச் 16ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.

ராய்யசபா தேர்தல் நேரடி மக்களவைகள் போல மக்கள் ஓட்டுகளால் தேர்வு இல்லை என்பதும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதால் அடுத்து பதவிக்கு தேர்ந்தெடுக்கப் போகும் மக்களின் பிரதிநிதிகள் யார் என்பது குறித்து எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com