

எதிா்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று தமிழக சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது.தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
வாக்குச்சாவடியில் பணிபுாிய உள்ள தலைமை அலுவலர் முதல்நாள் மதியமே அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஆஜராகவேண்டும்.
பணி உத்தரவு நகலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளோமா என்பதை முதலில் உறுதி செய்து கொள்வது நல்லது.
வாக்குச்சாவடி அறைக்குச்சென்று மின் விளக்கு வசதி , மின்விசிறி மற்றும் பிளக்பாயிண்ட்டுகள், சரிவர உள்ளதா என உறுதி செய்வதே நல்லதாகும்.
அதன்பிறகு வாக்குச்சாவடியை சரிவர அமைக்க தேவையான நாற்காலி, மேஜை ,பெஞ்ச் ,டஸ்க் தேவையான அளவு உள்ளதா என சரிபார்க்கவேண்டும்.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வரும் ஆவணங்கள் மற்றும் படிவங்கள் இதர பொருட்களை சரிபாா்த்து வாங்கிவைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடிக்குாிய வாக்குப்பதிவு இயந்திரம் தான் வந்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி அறையில் ஜன்னல் கதவுகள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருக்கும் நிலையில் அந்த பக்கத்தில் உள்ள ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபாா்ப்பது நல்லது.
தன்னோடு பணிபுாியும் இதர அலுவலர் கள் வருகை புாிந்துள்ளாா்களா என்பதை உறுதி செய்துகொண்டு, யாரேனும் இதர அலுவலர்கள் வருகை தராத நிலையில் உடனடியாக மண்டல அலுவலருக்கு தகவல் தரவேண்டும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அமரும்நிலையில் இதரஅலுவலர்கள் முகவர்கள் ஆகியோர் எதிா் எதிரே அமர்வது போல அமர்ந்துகொள்ள ஏதுவாகஇரு புறங்களிலும் அமர வசதியாக இருக்கைகள் அமைத்திடல் வேண்டும்.
எந்த பிரச்சனை மற்றும் இதரதேவைகளுக்கும் சம்பந்தப்பட்டகாவல் நிலைய அலுவலர் , கிராமநிா்வாக அலுவலர் ,கிராமப் பணியாளர், ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் தகவல் கூறவேண்டும் .
படிவங்கள் அனைத்திலும் தொகுதியின் பெயர், ஒன்றியம் தாலுக்கா மாவட்டத்தின் பெயர் ,பெயர் வாக்குச்சாவடி எண்நடைபெறும் இடம், வாக்குப்பதிவு நாள் போன்ற இன்னபிற ரெடிமேடான எழுத்துப் பணிகளை முன்கூட்டியே எழுதி வைக்கலாம்.
கழிவறை வசதி, குடிநீா் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேம்ப் வசதி உள்ளதா என்பதை சரிபாா்ப்பது நல்லது.
வாக்குச்சாவடி வெளிப்புறம் சுகாதாரபணியாளர்களை ஈடு படுத்தி சுத்தம் செய்யச் சொல்லலாம்.
கரும்பலகையை எடுத்துவந்து வாக்குச்சாவடிக்குண்டான போஸ்டர்களை முன்கூட்டியே ஒட்டி வைக்கவேண்டும்.
இவைகளையெல்லாம் முதல் நாள் இரவே செய்து முடித்துவிட்டால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவை துவங்க செளகர்யமாய் அமையும்.
அதேபோல காலையில் வாக்குப்பதிவு துவங்கும் அரைமணிக்கு முன்பாக கட்சிகளுக்குாிய முகவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெறவேண்டும்.அதே போல அனைத்து முகவர்களையும் அழைத்து மாதிாி வாக்குப்பதிவு நடத்திக்காட்ட வேண்டும்.
அதன் பிறகு தோ்தல் துவங்கியநேரம், வாக்குப்பதிவு இயந்திரம் பயன் பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்து படிவம் பகுதி ஒன்று இரண்டு இவைகளை பூா்த்திசெய்து முகவர்களிடம் கையொப்பம் பெற்று வாக்குப்பதிவை துவங்கலாம்.
அதேபோல ஒருமணிக்கு ஒருமுறை வாக்கு பதிவு விபரம் தொிவிக்க உாிய பதிவுகளை மேற்கொண்டு தோ்தல் அலுவலரின் குறிப்பேட்டினை சரிவர பராமரிக்க வேண்டும்.
அனைத்து வாக்காளர்( AV ) வாக்குச்சாவடியாக இருந்தால் ஆண்வாக்காளர் ஒருவர் பெண்வாக்காளர் என மாறி மாறி வாக்களிக்க அனுமதித்தால் பிரச்சனையே வராது.
கடுமையான வெயிலாக இருந்தால் சம்பந்தப்பட்ட கிராமநிா்வாக அலுவலாிடம் தகவல் சொல்லி சாமியானாபந்தல் போட ஏற்பாடு செய்யலாம்.
அதேபோல வாக்குப்பதிவு முடிவடைந்ததும் படிவம் பகுதி எண் மூன்றை (part 3 ) பூா்த்தி செய்ய வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடி சீல் வைத்ததை உறுதி செய்ய படிவம் பகுதி part IV பயன்படுத்தவேண்டும்.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு வர தடை எனவே அதை நடைமுறைப்படுத்தவேண்டும் .
இப்படி சின்ன விஷயங்களில் கவனமாக செயல்பட்டு தோ்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பது தோ்தல் அலுவலர்களின் கடமையாகும்.
அவ்வப்போது எழும் சந்தேகங்களை மண்டல அலுவலரிடம் கேட்டு செயல்படுவது சிறப்பான ஒன்றாகும்.
முதல்நாள் மதியம் வந்தது தொடங்கி தோ்தல் முடிந்து அனைத்து படிவங்கள் உபயோகிக்கப்பட்டது மற்றும் உபயோகிக்கப்படாத இனங்களுடன் ஆவணங்களையும் சரிவர ஒப்படைப்பது வரையில் அனைத்து பணிகளும் வாக்குச்சாவடி தோ்தல் நடத்தும் அலுவலரையே சாரும் என்பதை கவனத்தில் கொள்வதே நடைமுறை