என் மாமியாருக்கு உடம்பு சரி இல்ல - கெஞ்சியும் கேட்காத பறக்கும் படை; அவசர தேவைக்கு கொண்டு சென்ற பணத்தை மீட்பது எப்படி?

flying squad
flying squadimage source:dinamalar
Published on

தமிழ்நாட்டில் சமீபத்திய நடவடிக்கையாக (2026)தேர்தல் விதி (Model Code of Conduct) அமலுக்கு வந்த உடன் ₹1.26 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாகன சோதனைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் மட்டும் கணக்கில் வராத ₹18 லட்சம் ரொக்கம் பிடிபட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி,உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

அவ்வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் உடுமலை ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்ட போது பல்லடம் நோக்கி வந்த காரில் ரூபாய்க்கு இரண்டு லட்சம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் வந்த மூன்று பேரிடம் விசாரணை செய்ததில் உடல் நலம் இன்றி இருக்கும் மாமியாரையும் தனது மனைவியையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளித்து செல்வதாகவும் அதற்காகவே இந்த பணம் என்றும் தெரியவந்தது . இருப்பினும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டிய நிலை வந்ததுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த காரில் இருந்த பெண் அழுதது சமூக வலைத்தளங்களில் வைரலாகி 'தேர்தல் கமிஷன் கெடுபடியால் மக்கள் அவதி என்ற செய்திகள் வந்தது.

உண்மையிலேயே அவசர மருத்துவச் செலவுக்காகப் பணம் கொண்டு செல்லும்போது பறிமுதல் செய்யப்பட்டால், அதைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்? இதோ சில முக்கியத் தகவல்கள்:

தேர்தல் காலத்தில் Model Code of Conduct (MCC) அமலில் இருக்கும் போது, விதிமீறி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தால் அது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.பறிமுதல் செய்யப்பட்ட பணம் எதற்காக என்று பில் பேங்க் ப்ரூப் ( bill, bank proof, GST bil) l போன்ற ஏதேனும் ஆதாரம் காட்டினால் உரியவருக்கு திருப்பி தரப்படும். ஆதாரம் இல்லாமல் தகுந்த விளக்கம் தர முடியாவிட்டால் இன்கம்டாக்ஸ் விசாரணைக்காக Income Tax Department க்கு அந்தப் பணம் அனுப்பப்படும்.

கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:

50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் கைவசம் வைத்திருப்பது அவசியம்:

  • வங்கிப் பணம் எடுத்த ரசீது (Bank Withdrawal Slip).

  • ஜிஎஸ்டி ரசீது (GST Invoice).

  • திருமணச் செலவு எனில் திருமண அழைப்பிதழ் (Wedding Invitation).

  • சொத்து விவகாரம் எனில் ஒப்பந்தப் பத்திரம் (Property Agreement).

மருத்துவ செலவுகளுக்காக எடுத்துச் சென்ற பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டால் பயம் வேண்டாம். அதை சட்டப்படி திரும்ப பெறலாம்.பணத்தை திரும்ப பெற உடனே ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். மருத்துவமனையின் அட்மிஷன் ஸ்லிப் , (estimate bill / admission slip) மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்சன் (Doctor prescription), ஸ்கேன் அல்லது பரிசோதனை ரிப்போர்ட்

(Scan / test reports), நோயாளியின் ஐடி (patient ID proof) , உடன் செல்வோரின்ID proof (Aadhar / PAN) ,பணம் எதற்காக எடுக்கப்பட்டது என்ற விளக்க கடிதம் (explanation letter) போன்ற ஆவணங்கள் இருந்தால் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு அதிகம்:

உடனடியாக பறிமுதல் செய்த அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்...பொதுவாக பறக்கும் படை, Election அதிகாரிகள் கொடுத்த seizure receipt copy மிகவும் முக்கியம்.

மாவட்ட தேர்தல் அதிகாரி (District Election Officer) அலுவலகத்தில் எழுத்துப் பூர்வ மனு (Written petition) கொடுக்க வேண்டும்

"Medical emergency purpose" என்று அதில் குறிப்பிட வேண்டும். பணம் பறிமுதல் செய்யப்பட்ட 24–72 மணி நேரத்தில் நடக்கும் விசாரணையில் ஆவணங்கள் சரியாக இருந்தால் பணம் விடுவிக்கும் உத்தரவு ( release order) தரலாம்.Approval வந்த பிறகு Treasury அல்லது கலெக்டர் அலுவலகத்தின் (Collector office ) மூலம் பணம் கொடுக்கப்படும்.

முக்கியமாக ₹50,000 மேல் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணத்தை வைத்திருப்பது அவசியம். ஆவணம் மற்றும் சரியான விளக்கம் இல்லாத போதுதான் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. முக்கிய சட்ட தகவலாக மருத்துவம், திருமணம், business போன்ற genuine reason இருந்தால் பணம் பறிமுதல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சான்று proof இல்லாததால் தற்காலிகமாகதான் பிடிப்பார்கள். இன்னொரு விஷயம் பொய் காரணம் சொன்னால் FIR கூட ஆகலாம்.

ஆகவே உணர்ச்சி வேகத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவசரத்தேவைக்கு என வரும்போது தகுந்த சான்றுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிடிபடும் பட்சத்தில் மாற்றாக செய்யவேண்டியவற்றையும் முன்னெச்சரிக்கையாக யோசிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
அரசு ஊழியர்களே உஷார்..! வாக்குச்சாவடியில் இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க!
flying squad

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com