அரசு ஊழியர்களே உஷார்..! வாக்குச்சாவடியில் இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க!

Vote
Vote
Published on

தமிழக சட்டசபை தோ்தல் எதிா்வரும் 23.04.2026 அன்று நடத்தப்பட உள்ளது.தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பொிய கடமை காத்திருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

நடுநிலைமை: அரசு ஊழியர்கள் எந்த வித கட்சிபாகுபாடுகளுக்கும் இடம் தராமல் விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தனது அரசு பணியை மேற்கொள்ளவேண்டும்.

போட்டியிடத் தடை: அரசுப் பணியாளர் நடத்தை விதி 1964-ன் படி, ஒரு ஊழியர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஊழியர்கள் கூட்டமைப்பில் யாருக்கு ஆதரவு என்பதை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவிப்பது தவறான முன் உதாரணமாகும்.

பணி அறிக்கை: அதேபோல தனது அதிகார பதவியை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்வது போல நடந்துகொள்ளவே கூடாது.

வாக்கு சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளை எந்த காரணம் கொண்டும் தவிா்ப்பது தவறு.அதேபோல அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு 22.4.2026 மதியத்திற்குள் பணிக்கு ஆஜராக வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அன்று இரவு அங்கு தங்குவதைத் தவிர்க்கக் கூடாது.

வாக்குப்பதிவு நாள் நடைமுறைகள் :தலைமை அலுவலர் வாக்குச்சாவடியில் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.காலையில் தோ்தல் நாளில் சரியான நேரத்தில் வந்திருக்கும் வேட்பாளரின் முகவர்களுக்கு உாிய பாஸ் மற்றும் இதர இனங்களை சரிபாா்த்து துவங்க வேண்டும்.

வாக்காளரின் பெயரை உரக்கப் படித்தல் நல்லது.அவ்வப்போது முகவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை சுமுகமாக தீா்வு செய்திடல்வேண்டும்.

மை வைக்கும் முறை : விரலில் மை வைக்கும் போது மை வைக்கும் அலுவலர் விரலை நீட்டுங்கள் என சொல்ல வேண்டும்.மாறாக கையை நீட்டுங்கள் என சொல்லவே கூடாது கை சின்னத்தை குறுப்பிடுகிறாா் என முகவர்களாலோ அல்லது பொதுமக்களாலோ விவாதம் எழாமல் பாத்துக்கொள்ளவேண்டும்.

பதிவேடு பராமரிப்பு: அவ்வப்போது தோ்தல் அலுவலர் தனது குறிப்பேடுகளை(Proceding Officers Diary ) பராமரிப்பதோடு ஒரு மணிக்கு ஒருமுறை வாக்குப்பதிவு விபரங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உதவியாளர் வசதி: வாக்குச்சாவடிக்குள் கண்தொியாத வாக்காளரை ஒருவர் அழைத்துவந்தால் அவரிடம் படிவம் 27ஏ வழங்கப்பட்டு (Blind and Inform Voters) அதை பூா்த்தி செய்து அவரை அழைத்து வந்த நபரிடம்(Companion) கையெழுத்து வாங்கி முகவர்களிடம் சொல்லிவிட்டு வாக்களிக்க அனுமதிக்கலாம்.அதேபோலஅனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உாிய படிவங்களை வழங்கி வாக்குப்பதிவை சுமுகமாகநடத்தலாம் .

தேர்தல் நிறைவு: மாலை தேர்தல் நேரம் முடியும் தருவாயில் நிறைய வாக்காளர்கள் காத்திருந்தால், தலைமை அலுவலர் கையொப்பமிட்ட துண்டுச் சீட்டுகளைக் கடைசி நபர் முதல் வரிசையாகக் கொடுத்து, நுழைவு வாயிலை மூடச் சொல்ல வேண்டும்.

இயந்திரங்களுக்குச் சீல் வைத்தல்: அதன் பிறகு முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவான இயந்திரங்களை மூடி சீல் வைத்துவிடவேண்டும் இதில் அதிக கவனம் தேவை .அதன்பிறகு எத்தனை வாக்குகள் பதிவானது என்ற விபரத்தை முவர்களிடம் தொிவிக்கவேண்டும்.

அதேபோல ஒரு வாக்குச்சாவடியில் ஐந்து வாக்காளர்கள்மட்டுமே இருக்கும் நிலையில் ஐந்து வாக்காளா்களும் வாக்களித்து விட்டு போனாலும் கூட மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரை சாவடியை மூடக்கூடாது காரணம் அந்த வாக்குச்சாவடியில் வேறு பிரச்சனைகள் வரவாயப்பு எழலாம், அதை வாக்குச்சாவடிதலைமை அலுவலர் செயல் படுத்தவேண்டும்.

பின்னா் ஒப்படைக்கவேண்டிய படிவங்கள் ஏனைய ஆவணங்களை சரிபாா்த்து வைத்துக்கொள்ள வேண்டும் .

வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்துச் செல்லும் உயர் அலுவலர் வரும் வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் யாரும் பணிமுடிந்ததாக கருதி வெளியில் செல்லக்கூடாது.

ஜனநாயக திருவிழாவில் முக்கிய பங்கு அரசு ஊழியர்களுக்கு இருப்பதால் அவரவர்கள் தனக்கான கடமையில் இருந்து தவறாமல் பணிபுாியவேண்டும் அதுவே சிறந்த ஒன்றாகும்."!

இதையும் படியுங்கள்:
பவானிபூரில் மீண்டும் மம்தாவுடன் மோதும் சுவேந்து அதிகாரி! – 2021 வரலாறு திரும்புமா..?
Vote

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com