என் பெர்ஃப்யூம் வாங்குங்க.. நான் டிவிட்டரை வாங்கறேன்: எலான் மஸ்க் ஜாலி ட்வீட்! 

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

 அமெரிக்க டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் நேற்று ‘பர்ண்ட் ஹேர்’ (Burnt Hair) என்ற புதிய பெர்ஃபியூமை தனது ‘போரிங் கம்பெனி’ நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தியுள்ளார்.  

இந்த பெர்ஃபியூமை ஆன்லைனில் வாங்கலாம் என்றும் கிரிப்டோ கரன்சியான டோஜ்காயின் (Dogecoin) மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் டிவிட்டர் பக்கத்தில் தன்னை ‘வாசனை திரவிய விற்பனையாளர்’ (Perfume Salesman) என குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க். 

மேலும் இன்று எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில்,”தயவு செய்து என்னுடைய பெர்ஃபியூமை வாங்குங்கள், நான் டிவிட்டரை வாங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.  

டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மறுத்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எலான் மஸ்க் தனது நிறுவன தயாரிப்பான வாசனைத் திரவியத்தை வாங்கிக்கொண்டால், தான் டிவிட்டரை வாங்குவதாக ஜாலியாக டிவீட் செய்திருப்பது வைரலாகியுள்ளது.  

அதுசரி.. இந்த பெர்ஃபியூம் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 100 டாலர்.. அதாவது இந்திய மதிப்பில் 8,400 ரூபாய்!  

logo
Kalki Online
kalkionline.com