Elon Musk
Elon Musk

எலான் மஸ்க் போட்ட மீம்ஸால் சர்ச்சை வெடித்துள்ள்து..!

Published on

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீம்ஸால் சர்ச்சை வெடித்துள்ள்து.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வேகமாக வளர்ந்துவிட்டது. அதிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்த பிறகு தொழில் நுட்ப உலகையே புரட்டி போட்டுவிட்டது எனலாம். உலகில் எங்குத் திரும்பினாலும் ஏஐ தான். உலகம் எப்படி இயங்குகிறது என்பதையே இந்த ஏஐ மொத்தமாக மாற்றும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஏஐ தொழில் நுட்பம் மொத்தமாக டெக் உலகை ஆட்டி படைக்க தொடங்கியுள்ள நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களில் சாட் ஜிபிடி தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் விதமாக ஏஐ தொழில் நுட்பத்தின் சில அம்சங்களை தனது செயலிகள் மற்றும் இயங்கு தளத்தில் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்தது.

இந்த நிலையில்தான், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால், ஐபோன்களுக்கு தனது அலுவலகத்தில் தடை விதிப்பேன் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளர். இது தொடர்பாக தமிழ் படத்தை வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எலான் மஸ்க். அதில், ஒரு ஆணும் பெண்ணும் இளநீரை பகிர்ந்து குடிப்பது போன்ற காட்சி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய நடவடிக்கையால் ஐபோன் பயனர்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகும் என எலான் மஸ்க் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மகாராஜா வருகிறார், பராக்! பராக்!
Elon Musk

ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்ற தலைப்புடன் இந்த மீம் பகிரப்பட்டுள்ளது. இந்த மீம் 2017ஆம் ஆண்டு வெளியான தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீம் பகிரப்பட்டது முதல் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது. எலான் மஸ்கின் இந்த மீம் பதிவிற்கு விதவிதமான ரிப்ளைகளும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த படம் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் நடிகரும் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com