காசாவிலிருந்து அவசரமாக 14 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

Kaza People
Kaza People
Published on

காசாமீது இஸ்ரேல் நடத்தும் போர், முடிவுக்கு வராத ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது காசாவின் மக்களைப் பாதுகாக்கும் விதமாக சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் காசாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இந்த கட்டுப்பாட்டை எதிர்த்து ஹமாஸ் என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பை இஸ்ரேல் உட்பட சில நாடுகள் தீவிரவாத இயக்கமாக அறிவித்தன. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வருகிறது. இந்தப் போரில் இதுவரை 37 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதேபோல் 86 ஆயிரம் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். மீதி இருக்கும் மக்கள், பசி பட்டினி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் செய்திப்பாளர்கூட அவரது நாட்டின் தோல்வியை ஒப்புக்கொண்டார். அதாவது, "ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு." என்று கூறினார்.

இஸ்ரேலின் திட்டம், ஹமாஸின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை மீட்க வேண்டுமென்பதுதான். ஆனால், இவ்வளவு நாட்களாக இஸ்ரேலின் திட்டம் நிறைவேறவில்லை. சில இடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (24-07-2024) நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் உறுதி!
Kaza People

ஏற்கனவே காசாவின் 80 சதவிகித பேர் வெளியேறியதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசாவில் சுகாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதேபோல உடனடியாக 14 ஆயிரம் பேர் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது. அதாவது காசாவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலியோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அடிப்படைத் தேவையான குடிநீர் கூட 90 சதவிகித அளவு கிடைக்கவில்லை என்பதால், சுகாதாரம் மிகவும் சீர்க்கெட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com