தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை கிடைக்குமா..? வலுக்கும் கோரிக்கை..!

The secret of Diwali celebration
Deepavali Celebration
Published on

தமிழ்நாட்டில் தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி அன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக். 21ஆம் தேதி அன்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை அக். 20ஆம் தேதி மட்டும்தான் மாநில அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள், புதிய திரைப்படங்கள் என தீபாவளி கொண்டாட்டங்களுக்கும் பொது மக்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள். இந்தாண்டு தீபாவளி அக்.20ஆம் தேதி கொண்டாடப்படும் நாள் திங்கட்கிழமையாகும்.இத்னால்,சனி,ஞாயிறு,திங்கட்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்/

மாணவர்களுக்கு இப்படி என்றால், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரு பக்கம் வருத்தமும் இருக்கிறது. அதாவது, திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு எப்படி அடுத்த நாளே வேலைக்கு திரும்புவது என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மும்பையின் 'பவர் ஸ்டார்ஸ்'! ⚡ மின்சாரம் திருடி விற்று ஒரு வருடம் லாபம் பார்த்த தில்லாலங்கடி கும்பல்..!
The secret of Diwali celebration

தீபாவளியை பண்டிகையைக் கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்றால் திங்கட்கிழமை தீபாவளி அன்று இரவே புறப்பட வேண்டும். இதனால், அனைவரும் ஒரே நாளில் கிளம்புவதால் இரயில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

அதேநேரத்தில், தீபாவளி நாள் அன்று கூட பொது மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, ஞாயிறு (அக். 20), திங்கள் (அக். 21) விடுமுறையுடன் செவ்வாய் (அக். 22) அன்றும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், சனிக்கிழமைகளிலும் பலர் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அது அமைந்துவிடும். மேலும், செவ்வாய்கிழமையில் விடுமுறை அறிவித்தால் ஏதாவது வேறு ஒரு சனிக்கிழமை ஒன்றினை வேலை நாளாகவும் அரசு அறிவிக்கலாம்.

இதேபோல், பலமுறை பண்டிகை காலங்களில் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசும் ஒரு நாள் கூடுதல் விடுமுறையை அறிவிக்கும் பழக்கம் நடை முறையில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை தீபாவளியை ஒட்டி கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது பொது மக்களின் இயல்பான எதிர்ப்பாகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com