

சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து செய்த பரப்புரையில் திமுக ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் இபிஎஸ்.
அதிலிருந்து சில இங்கு..
தமிழ்நாட்டில் கஞ்சா ஆசாமிகளால் தான் கொலை,கொள்ளை பாலியல் வன்கொடுமை நிகழ்கிறது திமுகவினரை போதை பொருள் விற்பனை செய்வதால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.
மதம் ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரை மானியம் ரூபாய் 12 கோடியாக உயர்த்தப்பட்டது . ரமலான் மாதத்தில் மசூதிகளுக்கு விலையில்லாமல் அரிசி தந்தது, ஹச் இல்லம் கட்ட ரூபாய் 15 கோடி ஒதுக்கியது, அதிமுக அரசு ரமலான் மாதத்தில் மசூதிகளுக்கு விலையில்லாமல் அரிசி கொடுத்தது , உலமாக்களுக்கான ஓய்வூதியம் 750 லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தியது என அனைத்தும் அதிமுக தான்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னது, ரூபாய் 100 கேஸ் மானியம் தருவேன் , நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றெல்லாம் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளது என அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். திமுகவினரை போதைப்பொருள் விற்பனையில் இருப்பதால் கட்டுப்படுத்த முடியவில்லை.தமிழ்நாட்டில் தங்கம் வெள்ளி விலை நிலவரம் போல் கொலை கொள்ளை நிலவுரம் வருகிறது.
கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றினேன். கொரானா காலத்தில் ஒரு வருடத்திற்கு தினமும் 7 லட்சம் பேருக்கு உணவு தந்தோம். கொரானா காலத்தில் ஒரே ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று போட்டோ ஷூட் நடத்தியவர் ஸ்டாலின்.
கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர், உதயநிதி துணை முதலமைச்சர் ஆகினர். அதிமுகவில் உழைத்தால் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். ஒரு குடும்பம் போல இருக்கும் கட்சி அதிமுக. ஒரு குடும்பத்திற்காக இருக்கும் கட்சி திமுக.
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது . 100 சதவீதம் வீட்டு வரி , கடை வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி ,பருப்பு, சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .குப்பைக்கும் வரி வசூலித்த ஒரே ஆட்சி ஸ்டாலின் ஆட்சி தான்.
இந்தியாவிலேயே கடன் வாங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஸ்டாலின் என்ன செய்தார்.? 5ந்தே வருடத்தில் தமிழ்நாட்டின் கடனை 10 லட்சம் கோடிக்கு உயர்த்தி உள்ளார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா உணவகங்கள் திறக்கப்படும். அம்மா உணவகம் என் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் .
மீன்பிடி தடைக்கால உதவி ரூபாய் 12000 ஆக உயர்த்தப்படும், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம், ரேஷன் கடைகளில் அதிக தரமிக்க அரிசியுடன் விலையில்லாத எண்ணெய் பருப்பு, அனைத்து குடும்பங்களுக்கும் குளிர்சாதனப்பெட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 10,000 என அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தரக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளுடன் கடந்த உரையை முடித்தார் இபிஎஸ்.