ஹார்மூஸ் நீரிணையை திறக்க முடியாது- ஈரான் மறுப்பும் டிரம்ப் எச்சரிக்கையும்..!

Hormuz Island
Hormuz Island
Published on

ஈரானுடன் போர் ஒப்பந்தம் குறித்து கெடு விதித்திருந்த அமெரிக்கா கெடு முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் தலையீட்டால் மேலும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைத்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு வருவதற்கும் அமெரிக்கா, ஈரான் இஸ்ரேல் போன்ற நாடுகள்  சம்மதித்திருக்கிறது.

இந்நிலையில் இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஹார்மூஸ் நீரிணையைத்  திறப்பதாக கூறிய ஈரான் திடீரென தனது நிலையில் மாறி மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹார்மூஸ் வழியாக வரும் எண்ணெய் கப்பல்களிடம் ஈரானுடன் சேர்ந்து கட்டணம் வசூலிப்பது பற்றி அமெரிக்கா யோசனை செய்து பெரும் நிதியை திரட்டுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரானின் நீரிணை திறக்கும்  மறுப்பு கவனம் பெற்றுள்ளது.

ஹார்மூஸ்  நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்ற ஈரானின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல உடனடியாக திறக்க வேண்டும் என்பதை  எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அறிவித்த ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதில் கூறப்பட்டுள்ளது . மேலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்றும் ஏற்புடையதாக இல்லை எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்த இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை குழுவை துணை அதிபர் ஜே டி வான்ஸ் நேரடியாக கவனிப்பார் என்றும அறிவித்துள்ளது.


லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்வதால் நீடிக்கும் சிக்கல் குறித்து  இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் லெபனானுக்கும் சம்பந்தம் இல்லை என்றும்  போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் பிரதமரும் தெளிவு படுத்தி இருப்பதாக விளக்கம்  அளித்துள்ளது வெள்ளை மாளிகை.

இந்நிலையில் அதிபர் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் 'உண்மையான ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றவில்லை என்றால் இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு பெரிய வலிமையான தாக்குதல் தொடங்கும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார் . மேலும் 'போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக கடைபிடிக்கும் வரை அமெரிக்க படைகள் தங்கள் நிலையிலேயே நீடித்திருக்கும்' எனவும் டிரம்ப் அதில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மேலும் போர்ச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "தமிழநாட்டில் காங்கிரஸ் எங்கேயும் கிடையாது" நயினார் நாகேந்திரன் அதிரடி.!
Hormuz Island

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com