செங்கோட்டையனுக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!! நான் மட்டும் ஆதாரங்களை வெளியிட்டால்...

sengottaiyan - eps
sengottaiyan - eps
Updated on

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களில் இருக்கும் நிலையில் திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் ஒருவருக்கொருவர் குற்றங்களை சுமத்தி அதற்கான பதில்களை பெற்றபடி தேர்தல் பரப்புரைகளை சுவாரசியமாக வருகின்றனர் .

சில நேரங்களில் அந்த சுவாரசியங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகவும் அமைந்த விடும்.

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன் மீது வைத்த அதிரடி குற்றச்சாட்டு.

அமைச்சர் பதவிக்காக கண்ணீர் வடித்தவர் செங்கோட்டையன்..ஒரு காலத்தில் எனக்கு மிகவும் நண்பராக இருந்தவர் செங்கோட்டையன். " நீ எனக்கு பதவி கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பது? "என கண்ணீர் வடித்தவர் அவர்.

செங்கோட்டையன் மிகவும் பொறாமை பிடித்தவர். கருணாநிதி படத்துடன் மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்தவர் செங்கோட்டையன். திமுகவின் உளவாளி அவர் என கண்டுபிடித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மு.க ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருந்தவர் செங்கோட்டையன். 100 நாள் சிறையில் இருந்து விட்டு வந்த அவர் ரோட்டில் நடக்க முடியாத அளவிற்கு ஆதாரம் உள்ளன. அதிமுகவை உடைக்க திமுகவுடன் சேர்ந்து துணை போனவர் 30 ஏக்கரில் கல்லூரி கட்டியது எப்படி?

வயதுக்கு தகுந்தாற்போல் செங்கோட்டையன் பேச வேண்டும் . அதிகாரிகள் ரெய்டு வந்த போது பணத்தை ஆற்றில் விட்டவர். பணம் மிஞ்சி இருந்தாலும் கட்சிக்காரர்களுக்கு கொடுக்காதவர் தான் செங்கோட்டையன்.

ஆதாரங்களை வெளியிட்டால் செங்கோட்டையன் வெளியில் நடமாட முடியாது. ஆதாரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும் எனவும் எச்சரிக்கை தரும் விதமாக பேசிய இபிஎஸ்-ன் அதிரடி பேச்சு மக்களிடையே அதிர்ச்சி தந்துள்ளது

மேலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெல்வேன் என்றும் அதிமுக செயல்படுத்திய அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு பெயர் வைத்தது திமுக என்றும் குறிப்பிட்டு வாக்குகளை சேகரித்தார் இபிஎஸ்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக நிர்வாகிகள் பொய் சொல்கிறார்கள் - கடலூர் காவல் துறை அதிரடி அறிவிப்பு.!
sengottaiyan - eps

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com