#BREAKING: தவெக நிர்வாகிகள் பொய் சொல்கிறார்கள் - கடலூர் காவல் துறை அதிரடி அறிவிப்பு.!

Cuddalore police
Tvk Campaign
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடலூரில் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை அனுமதி அளித்தும், பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளது தவெக தலைமை.

விஜய்யின் கடலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் கடலூரில் பொதுக் கூட்டத்திற்கு மட்டுமே தாமைக்கான நிர்வாகிகள் அனுமதி கூறினர் எனவும் ரோடு ஷோவுக்கு அனுமதி கூறப்படவில்லை எனவும் கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: மகுடம் சூடிய தெற்கு இரயில்வே: நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை.!
Cuddalore police

கடலூரில் பொதுக் கூட்டத்திற்கும், விஜய்யின் ரோடு ஷோவுக்கும் அனுமதி கோரப்பட்டதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கிய காவல்துறை, ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள் பொய்யுரைப்பதாக கடலூர் காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி தவெக சார்பில் கடந்த ஏப்ரல் 9 மற்றும் 11ம் தேதி மட்டுமே ரோடு ஷோவுக்கு அனுமதி கோரிப்பட்டது.

ஆனால் தற்போது கடலூரில் பொதுக் கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டோம் என தவெக நிர்வாகிகள் பொய் சொல்கிறார்கள் என கடலூர் காவல்துறை தெளிவாக தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பீகார் பிரபலத்தை களத்தில் இறக்கிய முதல்வர் ஸ்டாலின்.!
Cuddalore police
logo
Kalki Online
kalkionline.com