எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் - அடித்து சொல்லும் தம்பிதுரை..!

EPS - THAMBIDURAI
EPS - THAMBIDURAI Source:oneindiatamil
Updated on

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல்களில் இந்த 2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தல் வரலாற்றில் பல திருப்பங்களை சந்தித்த தேர்தலாக பதிவு செய்யும் விதத்தில் உள்ளது. ஆண்டாண்டு காலமாக தமிழக மக்களை ஆட்சி செய்து வந்த இரு பெரும் கட்சிகள் இரு பெரும் திராவிட கட்சிகளை விட பெரும்பான்மை இடங்களை பெற்று புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தற்போது ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை தமிழக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இன்னும் பூர்த்தி அடையாத நிலையில் அக்கட்சி விசிக இ.கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் உள்ள எம்எல்ஏக்களின் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்று 5 எம்எல்ஏக்களுடன் தவெக கட்சியில் இணைந்து விட்ட நிலையில் இந்த கட்சிகளின் ஆதரவு கிடைத்துவிட்டால் விரைவில் தனது பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபித்து விஜய் ஆட்சிக்கு வரும் சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் இன்னும் இதுவரை இந்த கட்சிகள் தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கடிதம் மூலம் எழுதியும், தவெக பொறுப்பாளர்கள் நேரில் சென்று கேட்டும் இதுவரை இந்த கட்சிகள் முழு மனதுடன் தங்கள் ஆதரவை தெரிவிக்காத நிலையில் அடுத்து ஆட்சி அமைக்க போகும் கட்சிகள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக ஆளுநர் எந்தக் கட்சியாக இருந்தாலும் 118 இடங்களை இதன் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிகள் ஆட்சி அமைக்க தடை இல்லை என்று அறிவித்திருக்கும் நிலையில் மும்முனை போட்டியாக தற்போது திமுக, அதிமுக, தவெக கட்சியினர் களத்தில் தயாராக உள்ளனர்.

தவெக ஆதரவு திரட்டி வருகிறதை அறிவோம். அடுத்த நிலையில் உள்ள மிக முக்கியமான இரண்டு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது இது குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

திமுகவிலிருந்து அதன் தலைவர் ஸ்டாலின் தாங்கள் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்வதையே விரும்புகிறோம் என்று தங்கள் நிலைபாட்டை உறுதி படுத்திவிட்ட நிலையில் அதிமுக எடுக்கும் முடிவுகள் பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

சமீபத்திய தகவல்களின் படி அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி அங்கு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அக்கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வராத நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன தம்பிதுரை தற்போது வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

``விரைவில் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விருப்பம்

ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இபிஎஸ் வெளியிடுவார்'' - என தம்பிதுரை எம் பி குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இபிஎஸ் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக மீண்டும் மக்கள் ஆதரவை பெறும் எனவும் இபிஎஸ் தலைமைதான் கட்சியை ஒன்றுபடுத்தும் எனவும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து அதிமுகவில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன .இப்போதைக்கு நாங்கள் கூற விரும்புவது அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வரும் எங்கள் தலைவரான எடப்பாடி மீண்டும் முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார். சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் இபிஎஸ் சென்ற இடம் எல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது" என உறுதியாக தம்பிதுரை தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் தேர்தல் குழப்பத்தில் அதிமுக தரப்பில் உருவாக்கப்படும் அரசியல் நம்பிக்கைச் செய்தியாக அதிமுகவினரிடம் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : 12ம் வகுப்பு தேர்ச்சி - டாப் 5 மற்றும் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்..!
EPS - THAMBIDURAI
logo
Kalki Online
kalkionline.com