#JUST IN : 12ம் வகுப்பு தேர்ச்சி - டாப் 5 மற்றும் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்..!

Helpline Numbers
10th, 12th Public Examimage credit - hindutamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாட்டில் +2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் - TOP 5


ஈரோடு     - 98.24%
சிவகங்கை     - 96.97%
திருச்சி     - 96.55%
தென்காசி - 96.15%
கன்னியாகுமரி -     96.12%


12ம் வகுப்பு தேர்ச்சி - பின்தங்கிய 5 மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி  - 91.31
திருவாரூர்     - 91
வேலூர்     - 90.73
ராணிப்பேட்டை - 88.2
விழுப்புரம் - 85.92

அரசு & தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் :

அரசுப் பள்ளிகள் - 92.16%

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%

தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%

ஆண்கள் பள்ளிகள் - 90.49%

பெண்கள் பள்ளிகள் - 97.08%

இருபாலர் பள்ளிகள் - 95.30%

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :

  • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 2,639

  • 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 5,170

  • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் 489

  • 95 சதவீதம் தேர்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் 1,572

தனித்தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

+ 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • மே 18 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  • ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் தனித்தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும்

  • பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், ஜூலை 8 முதல் 16ம் தேதி வரை நடத்தப்படும் தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: வெளியானது +2 ரிசல்ட்.. ஒரே நொடியில் ரிசல்ட் பார்ப்பது எப்படி?
Helpline Numbers
logo
Kalki Online
kalkionline.com