அவசர சிகிச்சைப் பிரிவில் ஈரோடு MP கணேசமூர்த்தி!

Ganesha Moorthy
Ganesha Moorthy

நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட மதிமுக கட்சியின் மூத்தத் தலைவரும் ஈரோடு எம்பியுமான கணேசமூர்த்தி தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இதனையடுத்து போலீஸார் இது ஒரு தற்கொலை முயற்சி என்று கூறுகின்றனர்.

திமுக கட்சியிலிருந்துப் பிரிந்த வைகோவுடன் வெளியேறிய மூத்தத் தலைவர்களில் ஒருவர்தான் கணேசமூர்த்தி. இவர் ஈரோடு தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருந்து வருகிறார். நேற்று கணேசமூர்த்தியைப் பார்க்க அவருடைய மகன் கபிலன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது சுயநினைவில் இல்லாத எம்பி கணேசனைக் கண்டு பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் கபிலன். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அவர் பூச்சுக்கொல்லி மருந்தைத் தண்ணீரில் கலந்து குடித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் மருத்துவமனையோ, கட்சித் தலைவர்களோ இந்தத் தகவலை உறுதிசெய்யவில்லை. இதனையடுத்து மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் வைகோ, கணேச மூர்த்தியை நேற்று கோவையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுப் பார்த்துள்ளார். அவருடன் சில கட்சி நிர்வாகிகளும் சென்றுள்ளனர்.

சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம், "கணேச மூர்த்தியின் உடல்நலக் குறைவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்குக் கூடுதலான மருத்துவ பரிசோதனைகள் தேவை என்று கூறினார்.

நேற்றிலிருந்து இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் கணேச மூர்த்தி இருந்து வருகிறார். இன்னும் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாகவே கூறப்படுகிறது. மருத்தவர்கள் இன்னும் எந்தத் தகவலையும் கூறவில்லை. 24 முதல் 48 மணி நேரத்தில் தான் எதுவாக இருந்தாலும் கூற முடியும் என்று மட்டுமே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
‘சங்கீத கலாநிதி’ விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Ganesha Moorthy

தேர்தல் நேரத்தில் ஈரோடு சிட்டிங் எம்பிக்கு இந்தநிலை ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்த மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் உதய சூர்யன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் கணேசன். தற்போதைய திமுக கூட்டணியில் ஒருத் தொகுதி மட்டுமே மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் வைகோ போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com