‘சங்கீத கலாநிதி’ விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

'Sangeetha Kalanidhi' Award: Chief Minister M.K.Stalin congratulates T.M.Krishna
'Sangeetha Kalanidhi' Award: Chief Minister M.K.Stalin congratulates T.M.Krishnahttps://tamil.oneindia.com
Published on

சென்னை மியூசிக் அகாடெமியின், ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பாடகர் டி.எம்.கிருஷ்ணா தேர்வாகி இருக்கிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார். அந்த வாழ்த்துப் பதிவில்,

“சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா சென்னை மியூசிக் அகாடெமியின், 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநிகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக சிகிச்சையில் புதிய மைல் கல்: பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை!
'Sangeetha Kalanidhi' Award: Chief Minister M.K.Stalin congratulates T.M.Krishna

டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றையத் தேவை!” என்று முதல்வர் அந்த வலைதளப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com