உக்ரைனுக்கு 160 கோடி டாலர் கொடுத்த ஐரோப்பா! அது யார் பணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...

Ukraine
Ukraine
Published on

ரஷ்யா உக்ரைன் போரினால், உக்ரைன் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. இதனிடையே முதல்முறையாக ஐரோப்பா 160 கோடி டாலரை வழங்கியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் தீராக்கதையாக இருந்து வருகிறது. ரஷ்யாவிடம் போரை நிறுத்தக்கோரி பல நாடுகள் கூறியும், அதனைக் கேட்காமல் போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற ரஷ்யாவின் பலம்வாய்ந்த தாக்குதல்களிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது.

இந்தநிலையில், பல உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவி செய்து வருகின்றன. அமெரிக்காவும் சமீபத்தில் பண உதவி செய்தது. இதன்மூலம் உக்ரைன் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்க திட்டம்போட்டது.

அந்தவகையில், தற்போது ஐரோப்பா ஒன்றியமும் உக்ரைனுக்கு உதவி செய்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க அந்நாட்டு பணத்தையே பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 (27-07-20224) - தனுஷ் திரைப்பயணத்தில் முதல்நாள் அதிக வசூலை ஈட்டிய படம் ராயன்!
Ukraine

ரஷ்யாவிடம் போரை நிறுத்தக்கோரிய உலகநாடுகள், அந்தநாடு போரை நிறுத்தாதல், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தன. ஆனால், உள்ளூர் பொருளாதார நிலைமைகளினால் அந்த நிதியை அளிப்பதில் சிரமம் ஏற்படவே, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரைனுக்கு வழங்கும்படி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறி வந்தனர். அதன்படி இப்போது பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சொத்துக்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். இது ஐரோப்பா நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைய வைத்துவிடும் என்றும் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com