இரு நாட்கள் காற்றும் மழையும் தொடரும்!

வானிலை ஆய்வு மையம் தகவல்!
rough sea
rough sea
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் டிசம்பர் 10 மதியம் வரை படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் இன்று மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரையிலான காற்று மதியம் வரையில் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை ஆனது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone
Cyclone

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் தொடர்ந்து 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வேகம் குறைய தொடங்கும். வட தமிழ்நாடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com