

தமிழகத்தில் தற்போது ஓட்டுரிமை உள்ள அனைவரிடத்தும் பேசுபொருளாக உள்ளது "S.I.R"(Special Intensive Revision) எனும் சிறப்பு தீவிர திருத்தம் கோரும் தேர்தல் கணக்கீட்டு (Enumeration) படிவம். இது குறித்து துவக்கத்தில் நிறைய சந்தேகங்கள் குழப்பங்கள் இருந்தாலும் தேர்தல் ஆணையம்(Election Commission) அவற்றுக்கான தீர்வுகளையும் பதில்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
விரைவில் தேர்தல் வரப்போகும் நிலையில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மறுபரிசீலனை செய்யும் ஒரு நடவடிக்கையான S.I.R ன் முக்கிய அம்சம் அனைத்து வாக்காளர்களும் கணக்கீட்டு படிவம்களை பெறுவது. தற்போது இந்த படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள்( BLO) வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில், மொத்த வாக்காளர் S.I.R படிவங்கள் 6,41,14,582 அச்சிடப்பட்டதாக ECI (Election Commission of India) ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது.
BLO-களிடம் வழங்கப்படும் படிவங்கள் சரியான முறையில் நிரப்பி திரும்ப சேகரிக்கப்படும். இதனால் மோசடி மற்றும் தவறான வாக்காளர் பட்டியலையும் இறந்தவர்கள், போலி முகவரி ஓட்டுரிமை போன்றவற்றை நீக்க இது உதவும் என்று ECI கூறுகிறது.
இது குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
33 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 68 ஆயிரம் பி எல் ஓக்கள் கணக்கீட்டுப் படிவங்கள் தந்து அதைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் அவகாசம் இதுவரை தரப்படவில்லை ஆகவே டிசம்பர் 4 வரை இந்தப் பணிகள் தொடரும். இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் படிவம் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கிட்டு படிவங்களில் 50% மக்கள் முறையாக நிரப்பி தந்துள்ளனர்.
ஓட்டுரிமை உள்ள குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான நடைமுறை தான் தற்போது சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் சுமார் 60% படிவங்கள் பூர்த்தி ஆகியுள்ளது.
முடிந்தவரை பூர்த்தி செய்தால் போதும். ஒருவேளை S.I.R தொடர்பான சந்தேகம் இருந்தால் அல்லது மோசடி போல செயல்படுவதாக தோன்றினால் உங்கள் Booth Level Officer (BLO) அல்லது Election Commission அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைனில் இதுவரை 2 லட்சம் எஸ் ஐ ஆர் படிவங்கள் நிரப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் நேரிடையாக பெறப்படும் எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது. சரியான தகவல் இன்றி புறக்கணிக்கப்பட்ட (எலிமினேஷன்) கணக்கிட்டு படிவங்களை மீண்டும் சரிபார்த்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆன்லைன் சர்வர் சரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. யார் பெயரையும் காரணம் இன்றி பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியாது . வாக்குச்சாவடி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். 327 பிஎல்ஓக்கள் தங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
ஒரே கட்சியினருக்கு வாக்காளர் படிவங்கள் வழக்கப்படுவதாக இருந்த புகாரை அர்ச்சனா பட்நாயக் மறுத்துள்ளார். தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் அதிகளவு வாக்காளர்களாக சேர்ப்பதாக எழும் சந்தேகத்தையும் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயரை சேர்க்க உரிய அவகாசம் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் இருந்து எவரின் பெயரையும் நீக்க முடியாது. அதே சமயம் கணக்கிட்டு படிவங்களில் அவர்கள் முறையாக பதிவு செய்து கொள்வது நல்லது எனவும் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ் ஐ ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். யார் பெயரையும் காரணம் இன்றி பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியாது. ஆனால் ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில் அதை பிஎல்ஓக்கள்தான் கண்டுபிடித்து சரி செய்ய முடியும். படிவத்தை நிரப்பும் போது உங்கள் விபரங்களை சரியாக நிரப்ப வேண்டும். தவறான விபரம் சேர்த்தால் அங்கீகாரம் பெறமுடியாத சிக்கல்கள் உண்டாகலாம்.
உண்மையான ஆதார், வோட்டர் ஐடி போன்ற அடையாள ஆவணத்தை தயாராக வைப்பது நல்லது. BLO-கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது கவனமாக தேவையான அனைத்து சந்தேகங்களையும் கேட்கவும்.
இந்தப் பணி முழுமை பெற மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பி எல் ஓக்கள் பணி சிறப்பு எனவும் குறிப்பிட்டார் அர்ச்சனா பட்நாயக்.