S.I.R. பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்! தேர்தல் ஆணையம் மக்களின் சந்தேகங்களை தீர்க்குமா?

sir work
sir work
Published on

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் காட்டும் அவசரமும், கணக்கெடுப்புக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன..

இயல்பாக அதிக காலம் தேவைப்படும் இந்த பெரும் பயிற்சிக்கான காலக்கெடு, திருத்தம் மற்றும் வாக்காளர்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அடிப்படை ஜனநாயகத்தைஉறுதி செய்ய வேண்டும், அதன் செயல் ஜனநாயகத்தை சுருக்கி விடக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

சிறப்பு திவிர திருத்தத்ததிற்கான அறிவிப்பு 27-10-2025 அன்று வெளியிடப்பட்டது. 51 கோடி வாக்காளர்களுக்கான கணக்கீட்டை 3 மாதங்களில் முடிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு இதுவரை காணாத அவசரத்தை வெளிப்படுத்துகிறது. புதிய வாக்காளர் பட்டியலை இவ்வளவு அவசரகதியில் தயாரிக்க முடியாது என்பதே உண்மை.

2026 ஆம் ஆண்டின் புதிய வரைவு பட்டியலில் சேர்ப்பதற்கான முதல் நிபந்தனை கடந்த SIR2002/2005 இல் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும். கடந்த திருத்தத்தில் பெயரைக் கண்டறிய தேர்தல் ஆணையமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களோ அத்தகைய விவரங்களை வழங்கவில்லை. அறைகளில் அமர்ந்திருக்கும் தேர்தல் ஆணையம் வெகுசாதாரணமாக வலைத்தளத்தில் கண்டுபிடிக்க அறிவுறுத்துகிறது.

வாக்காளர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கீழே உள்ளன:

1 பெரும்பாலான நேரங்களில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் அணுகமுடிவதாக இருப்பதில்லை. இதனால், அந்த இணையதளத்தின் அணுகல் சலிப்பூட்டுவதாக உள்ளது.

2. ஒருசமயம் அணுக முடிந்தால் , தேடுவதற்கு நமக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன (அ)பெயர் மூலம் (b) வாக்காளர் அடையாள அட்டை மூலம் (c.) வாக்காளர் பட்டியலில் தேடுவதன் மூலம்.

3 வாக்காளர் அடையாள அட்டை மூலம் தேடும் வசதி சமீபத்தில் முகப்பு பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. பின்னர் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் மூலம் தேடுவதற்கு வாக்குச்சாவடி எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் தேடுவது சாத்தியமில்லை. எனவே, நாம் பெயர் மூலம் தேடலைத் தேர்வு செய்ய வேண்டும். தேடல் முடிவுகள் 5 முதல் 10 வாக்காளர்களின் பெயர்களைக் காட்டுகின்றன. வாக்குச் சாவடி எண் தெரியாத படசத்தில் வாக்காளர் தன் பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒருவரின் பெயரைக் கண்டுபிடிக்க காட்டப்பட்ட அனைத்து முடிவுகள் தொடர்புடைய வாக்குச் சாவடி எண்களுக்கு செல்வது யாருக்கும் சாத்தியமில்லை.

4. மீண்டும், படிவத்தில் தந்தை மற்றும் தாயின் பெயர் மற்றும் அவர்களின் EPIC எண்கள் (இருப்பின்) குறிப்பிட வேண்டும் 2002/2005 SIR இல் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையை கொண்டிருக்கவில்லை, மேலும் வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் EPIC ஐ எங்கிருந்து வழங்க வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. இது தேவையற்றதாகவே கருதப்படுகிறது. அவர்களுக்கு ஏன் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் பெயர்களும் தேவை என்பதை ஆணையம் விளக்க வேண்டும்.

5. கணக்கீட்டு படிவங்களை நிரப்பும்போது, நகரத்தில் வசிக்கும் உயர்தகுதி வாய்ந்த நபர்கள் முதல் தொலைதூர கிராம மக்கள் வரை அனைவரும் அதை எவ்வாறு நிரப்புவது என்பதில் இதே போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

6. கடைசி தீவிர சிறப்பு திருத்தத்தில் உறவினர் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது . யார் அந்த உறவினர்? எந்த உறவினர் பெயர் கொடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.

7. படிவத்தில் ஏதேனும் பிழை சரிசெய்யப்பட்டால், கணக்கீட்டு படிவத்தின் நிலை என்னவாகும். வாக்காளர் கணக்கீட்டிற்கு தேர்தல் ஆணையம் கோரிய ஆவணங்கள் பொதுவாக பெரும்பான்மையான வாக்காளர்களிடம் இருப்பதில்லை. பல்வேறு அரசுத் துறைகளுக்கு அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவாக கிடைக்கக்கூடிய ஆவணங்களை ஆணையம் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக கூட ஏன் ஏற்பதில்லை என்பது புரியவில்லை.

வரைவு பட்டியல் வெளியிடப்படும் வரை வாக்காளர் இருளில் வைக்கப்படுகிறார். அதுபோன்றே இறுதி பட்டியல் வெளியிடப்படும் வரை உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த நிலைமையும் ஆகும்.. இது தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இல்லாதபோது வாக்குரிமையை இழக்க வழிவகுக்கிறது,

மேலும் வரவிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க முடியாது. இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளின் போது அவர்களின் கணக்கீட்டின் நிலை குறித்து அறிய எந்த ஏற்பாடும் இல்லை.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் இந்த வங்கி கணக்குகள் முடக்கப்படும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!
sir work

மற்றொரு பிரச்சினை வாக்காளர்களின் இடமாற்றம். அருகிலுள்ள வாக்காளர்களின் விசாரணையின் அடிப்படையில் படிவத்தைத் திருப்பித் தராதவர்கள் இல்லாதது/மாற்றப்பட்டது/மரணம்/நகல் போன்ற சாத்தியமான காரணங்களை அடையாளம் காண ஆணையம் வாக்கு சாவடி அலுவலரை அறிவுறுத்துகிறது. இது எந்த வகையிலும் சரியாகத் தெரியவில்லை. இவற்றை கிராம சபை மற்றும் வார்டு குழுக்கள் வெளிப்படையான முறையில் முடிவு செய்ய வேண்டும்..

சிறப்பு திருத்தம் 2026 கணக்கீடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்தசிக்கல்களைத் தீர்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் பற்றாக்குறையான பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கவேண்டும். ஆவணங்களில் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதார் மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள குடும்ப அட்டை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவையும் இருக்க வேண்டும்.

பீகார் தீவிர சிறப்பு திருத்தம் 13 ஆவணமாக இணைத்திருப்பதை நீக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் தனது நடுநிலைமை குறித்த மக்களின் தீவிர கவலைகள் பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இது குறித்து பொது மக்களுக்கு இருக்கும் அனைத்து அச்சங்களுக்கும் பதிலளிக்க வேண்டும், ஏனெனில் மக்கள் பார்வையில் தேர்தல்ஆணையம் நம்பிக்கையின்மையை தற்போது எதிர்கொண்டுள்ளது.

பொதுவாக படிவம் நிரப்பும் போது வாக்காளர்களுக்கு எழும் கேள்விகள்:

(2வது கட்டம்) முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது பட்டியலில் உள்ள வாக்களர் பெயர் எந்த ஆண்டு திருத்தம் என்று குறிப்பிடவில்லை.

உறவினர் பெயர். இது குறித்து தெளிவு இல்லை. வழக்கமாக தந்தை/கணவர் பெயர் என்று இருக்கும்.

மாவட்டம் எது என்பதில் குழப்பம். வாக்காளர் பட்டியலில் உள்ள மாவட்டமா அல்லது தற்போது இருக்கும் மாவட்டமா ? (3வது கட்டம்) முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது பட்டியலில் உள்ள வாக்களர் பெயர் எந்த ஆண்டு திருத்தம் என்று குறிப்பிடவில்லை.

எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை, இந்த படிவத்தின் விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் தங்களின் வாக்குரிமை பறிபோய் விடுமா? என்ற அச்சம்தான். இதற்கானத் தீர்வை நோக்கி பயணிக்க தேர்தல் ஆணையம்தான் உதவிக்கரம் நீட்ட வேண்டும்..இதுவே நம் அனைவரின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் ரூ.3,500-லிருந்து ரூ.25,000 ஆக உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு!
sir work

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com