நீட் ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆகலையா? - இதோ உங்களுக்கான தீர்வு!

நீட் தேர்வு
நீட் தேர்வு
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நீட் 2026 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும்பொழுது அதிகப்படியான டிராஃபிக் காரணமாக சர்வர் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 28 22.79 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்கள் நேற்று 26, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்தது. இந்தியா முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கி உள்ளனர். ஒரே நேரத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை  பதிவிறக்க முயற்சிப்பதால் பதிவிறக்குவதில் தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சிறிது நேரம் கழித்து நல்ல இணைய இணைப்பில் மீண்டும் முயற்சி செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்  மொத்தம்  22.79 லட்சம் பதிவு செய்த மாணவர்களில் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெற்றிகரமாக ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். வீணாக  பதற்றம் அடையத் தேவையில்லை என்றும், NTA இணையதளத்தில் பிரவுசர் கேச்(Cache ) மற்றும் குக்கீகளை(Cookies) கிளியர் செய்துவிட்டு இன்காக்னிட்டோ(Incognito) பயன்முறையை பயன்படுத்தவும். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் முயல்வதால் ஏற்படும் தற்காலிக சிக்கல்தான் இது என்றும், அதிகாலை அல்லது நள்ளிரவில் பதிவிறக்கம் செய்யும்பொழுது நெரிசல் குறைவாக இருக்கும் என்றும் அந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்வது சுலபமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மே 3, 2026 அன்று தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து சிக்கல் இருந்தால் NTAன் ஹெல்ப்லைன் எண்களை(011-40759000, 011-69227700) தொடர்பு கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி..!!
நீட் தேர்வு
logo
Kalki Online
kalkionline.com