பிரபல டூத்பேஸ்ட் பெயரில் போலி..! தொழிற்சாலை அமைத்து கல்லா கட்டிய கும்பல்..!

sensodyne fake product
sensodyne fake productsource:news9live
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டெல்லி கஞ்சவாலா பகுதியில் இயங்கி வைத்த போலி Sensodyne(சென்சோடைன்) டூத் பேஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தை குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற சோதனையில், ரோகிணியைச் சேர்ந்த ஹரி ஓம் மிஸ்ரா (58 வயது ) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி டூத் பேஸ்ட்கள், காலியான குழாய்கள், பேக்கிங் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் 130 கிலோ போலிப் பசை, 10,000க்கும் மேற்பட்ட காலி ட்யூப்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாபீர் விஹார் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில் இந்த போலிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. குறைந்த தரம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இந்த போலி பற்பசைகள் மக்களுக்கு தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம்.. தவெக விஜய் அதிரடி உறுதி..!
sensodyne fake product
logo
Kalki Online
kalkionline.com