மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள விவசாயிகள் போராட்டம்! திணறும் மத்திய அரசு!

விவசாயிகள் போராட்டம்.
விவசாயிகள் போராட்டம்.
Published on

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது மீண்டும் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இது மத்திய அரசு பஜகாவிற்கு பெரிய தலை வலியாக அமைந்துள்ளதால், அந்தப் போராட்டத்தை மத்திய அரசு கைய்யாளும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான பாஜகா அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி விவசாயிகள் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 700 விவசாயிகள் உயிரிழந்தனர். அதேபோல் மத்திய அரசும் வாப்பஸ் வாங்க மாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தது. ஆனால் போராட்டம் நீண்டுக் கொண்டே போக ஒருக்கட்டத்தில் மத்திய அரசு இறங்கி வந்து அந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கியது. அப்போது போராடிய விவசாயிகள் அமைப்பு பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சில வாக்குறுதிகளை வழங்கியது.

இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு விவசாயிகள் டெல்லிக்கு படை எடுத்துள்ளனர். இந்த இரண்டாவது விவசாயிகள் போராட்டத்திற்கு 200 விவசாயிஅமைப்புகள் ஆதரவு தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்படுகின்றனர். இதனையடுத்து மத்திய அரசு அந்த போராட்டத்தை தடுக்க பல விதத்தில் முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றது.

போலிஸார் ஆங்காங்கே விவசாயிகள் வரும் வண்டிகளை இரும்பு முள் தடுப்புகள், கான்கிரீட் தடுப்புகள், இரும்புத் தடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தடுக்கின்றனர். அதையும் மீறி வயல் வெளிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் அத்துமீறி நுழையும் விவசாயிகள் மீது, ட்ரோன் மூலம் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதையும் தாண்டி விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

பஞ்சாப், ஹரியானா எல்லைகளைத் தாண்டி விவசாயிகள் முன்னேறியபோது போலிஸார் விவசாயிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த இடமே ஒரு போர்க்களம் போல் மாறியது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல பேர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
Preity Zinta: வாழ்க்கை வரலாறு.. தனி ஆளாய் முன்னேறிய நட்சத்திரம்!
விவசாயிகள் போராட்டம்.

பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது இந்த போராட்டம் ஆரம்பித்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமையத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டம் பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எண்ணியே மத்திய அரசு ஒரு பயங்கரவாதத் தாக்குதலை விவசாயிகள் மீது நடத்தி வருகிறது என்று பலரும் கூறிவருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி மூன்று மத்திய அரசு அமைச்சர்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் மீண்டும் போராட்டம் வலுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com