அமைச்சர் பிரிஜ் பூஷனை கைது செய்ய விவசாய சங்கம் ஒரு வாரம் கெடு!

அமைச்சர் பிரிஜ் பூஷனை கைது செய்ய விவசாய சங்கம் ஒரு வாரம் கெடு!

ந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமானபிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின்போது பேரணி நடத்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணைய தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வாருக்குச் சென்ற வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினர் தங்களுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் தந்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்போம் என்றும் கூறி, அவர்களுக்கு ஆதரவு தந்தனர். அதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாய சங்கம் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை கையில் எடுக்கும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர். இதற்கு ஜூன் 9ம் தேதி வரை அவர்கள் அவகாசமும் கொடுத்து இருக்கின்றனர்.

விவசாய சங்கத்தினருக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்கி இருக்கும் நிலையில், உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நேற்று தொடர் போராட்டத்தை நடத்தினர். இந்தச் சூழலில் வரும் 9ம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர்கள் அறிவித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்கப்படும். அரசு நடுநிலையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறி இருக்கிறார். ஆனாலும், பிரிஜ் பூஷன் கைது குறித்து அவர் எந்த உறுதியும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில், ‘மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசதான் காரணம்’ என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டிற்காக 25 பதக்கங்களைப் பெற்றுத் தந்த மகள்கள், நீதி கேட்டு வீதிகளில் போராடுகின்றனர். ஆனால், 15 பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் 2 எப்.ஐ.ஆர்களுடன் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். மகள்களின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com