ஃபேஷன் அழகியான மூதாட்டிக்கு ஹாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்!

Margaret Chola
Margaret Chola
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஒரு மூதாட்டி ஃபேஷன் அழகியாக மாறி வெறித்தனமாக புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தற்போது ஃபேஷன் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமைகளையும் அழகையும் வெளிக்காட்டி  வருகிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் ஃபேஷன் உலகம் மேலும் மேலும் விரிவடைந்துக்கொண்டே வருகிறது. புது புது ட்ரெண்டுகளும் அறிமுகமாகி வருகின்றன. பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருமே இந்த ஃபேஷன் உலகில் தடம் பதித்து வெற்றிக் காண்கின்றனர்.

அப்படி ஒரு மூதாட்டி ஃபேஷன் அழகியாக மாறி பல வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அந்த மூதாட்டியின் பெயர் மார்கரெட் சோலா. இவர்  ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது வயது 85 வயதாகும்.

இவரின் பேத்தி நியூயார்க்கில் ஒரு மேக்கப் கலைஞராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான ஜாம்பியாவிற்கு வந்திருந்தார். அங்கு தனது பாட்டியுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்தார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றன. மேலும் இந்தப் பாட்டிக்கு தற்போது 105,000 ஃபாலோவர்ஸ் உள்ளனர். பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

தனது தந்தையின் நினைவு நாளுக்காக வந்த பேத்தி, தனது பாட்டிக்காக எதாவது செய்ய வேண்டும் என்று இந்த முயற்சியில் இறங்கினார். இந்த வருடம்தான் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டார். இந்த ஒரு வருடத்திலேயே அவரின் புகழ் உச்சத்தை சென்றதோடு, சீரிஸ் வாய்ப்புகளும் வந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தத் தடை!
Margaret Chola

முன்பெல்லாம் பாட்டி பேத்தி என்றால் ஒன்றாக விளையாடுவார்கள். ஆனால், இப்போது இந்த டிஜிட்டல் உலகத்தின் துணைக் கொண்ட ஃபேஷன் உலகத்தில் தனது பாட்டியை அழகுப்படுத்தி ரசிக்கும் நிலை வந்திருக்கிறது. 83 வருடங்களாக வெளியே தெரியாத பாட்டி 1 வருடத்தில் உலகளவில் புகழ்பெற்றிருக்கிறார் என்றால், இதுவே ஃபேஷன் உலகத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com