நாளை முதல் புது விதி.! இனி ₹100 டோலுக்கு ₹200 கட்ட வேண்டும்!

TOLL
Toll
Published on

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2021-ல் கட்டாயமாக்கப்பட்ட FASTag திட்டம்,சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்தது. மேலும், ஊழியர்களுடனான சில்லறைப் பிரச்சனை மற்றும் தகராறுகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைத்தது.

இந்நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்கள், செல்லுபடியாகும் FASTag இல்லாமல் இருந்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், FASTag இல்லாதவர்களுக்கு இப்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் செலுத்துவதிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதை விரைவுபடுத்த இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

நாளை முதல் பாஸ்டேக் இல்லாமல் பணம் கொடுத்து டோல் கட்டுபவர்கள் இரட்டிப்பு தொகை செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ மூலம் கட்டினால் வழக்கமான கட்டணத்தின் 1.25 மடங்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது FASTag இல்லாமல் ரொக்கமாக (Cash) சுங்கக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள், வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு மடங்கு (2X) கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, FASTag மூலம் வழக்கமான சுங்கக் கட்டணம் 100 ரூபாய் என்றால், ரொக்கப் பணம் 200 ஆக இருக்கும். மாறாக, FASTag இல்லாமல் UPI போன்ற பிற டிஜிட்டல் வழிகளில் கட்டணம் செலுத்தத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஓரளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு (1.25X) கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு வாகனம் FASTag மூலம் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், UPI மூலம் செலுத்தப்படும் கட்டணம் ரூ.125 ஆக இருக்கும்.இந்த நடைமுறை தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து டோல் கேட்களுக்கும் அமலாகிறது.

இந்த நடவடிக்கை நெரிசலைக் குறைப்பதன் மூலம் பயணத்தை வேகப்படுத்தவும், ரொக்கப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பதன் மூலம் சுங்கச்சாவடி செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு சமீபத்தில் பாஸ்டேக் Annual Pass என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களுக்கு பொருந்தும். ஆண்டிற்கு ரூ.3,000 செலுத்தி, ஒரு வருடம் அல்லது 200 டோல் கடப்புகளுக்கான பாசாக பெறலாம். இது 1,150க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களில் பயன்படுத்தக்கூடியது.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகள் ஷாக்..! 3000 ரூபாய் பாஸ் இருந்தாலும் இங்க நீங்க டோல் சார்ஜ் கட்டித்தான் ஆகணும்...!
TOLL

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com