5 மாத குழந்தைக்கு தந்தையே எமனாக வந்த கொடூரம்!

Child murder
Child murder

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஓல்டு ஊட்டி எனப்படும் பழைய ஊட்டியில் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஓல்டு ஊட்டி எனப்படும் பழைய ஊட்டியைச்‌ சேர்ந்தவர்கள் பிரேம், ரம்யா என்ற தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. பிரேம்‌‌ கூரியர்(Courier) நிறுவனம்‌ ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார்.

பிரேம் வழக்கம்போல் நேற்று காலை 7 மணியளவில் வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார். அதன்பின் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை எழாமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த தாய் ரம்யா, குழந்தையை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். ஆனால் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறியிருக்கிறார். உடனே அக்கம் பக்கத்தினரின்‌ உதவியுடன் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் கண்ணங்கள் வழக்கத்திற்கு மாறாக சிவந்து காணப்பட்டதைக் கண்ட மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் குழந்தையின் தந்தை பிரேம் குழந்தையின் கண்ணங்களை தாக்கியதில் குழந்தை இறந்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பாடல் கேட்டதால் தூக்கு தண்டனை… வடகொரியாவில் கொடூரம்!
Child murder

நேற்று விடுமுறை நாள் என்பதால் பிரேம் வீட்டில் இருந்துள்ளார். ரம்யா குழந்தையை வீட்டில் கணவருடன்  விட்டுவிட்டு அருகில் துணி துவைப்பதாக சென்றுள்ளார். அந்த நேரம் குழந்தை அழுதத்தால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையின் கண்ணங்களை தாக்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேம் தாக்கியதில் குழந்தையின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சேதம் ஏற்பட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெற்ற குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் மனதை பதற வைக்கிறது. கொலை வழக்காக மாற்றி தந்தை பிரேமை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com