Iran and Saudi
Iran and Saudi

ஈரானுடன் கைக்கோர்க்கும் சவுதி? ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்!

Published on

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரை எதிர்க்கும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவை விட்டுவிட்டு சவுதி, ஈரானுடன் கைக்கோர்க்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய போவது உலகப்போர் அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்த போர் தீவிரமடைந்துள்ளது. அதாவது, இஸ்ரேல் என்பது கிறிஸ்தவ நாடாகும். காசாவை உள்ளடக்கிய பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடாகும். பிற இஸ்லாமிய நாடுகள் இந்த போரை கைவிடுமாறு இஸ்ரேலிடம் கூறிவிட்டன. ஆனால், இஸ்ரேல் போரை கைவிடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாலஸ்தீனம் ஒரு இஸ்லாமிய நாடு என்பதாலும், போரினால் அதிகம் பாதிகப்படும் நாடு என்பதாலும், ஈரான் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. போரை கைவிடாவிட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான் தாக்க தொடங்கியது.

காசாவிற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை எதிர்க்கும் வகையிலும் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைப்பதை ஒரே குறிக்கோளாக வைத்திருக்கிறது ஈரான். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசஷ்கியான், கத்தார் அதிபருடன் கலந்து ஆலோசித்தார். அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக கத்தாரின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பாராட்டு தெரிவித்தார். இந்த வேளையில் இஸ்ரேலின் போர் குற்றத்தை தடுக்க வேண்டும், இதற்காக அனைத்து இஸ்லாமிய நாடுகளும், பிற நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
அது ஜெயிலா இல்ல 5 ஸ்டார் ரிசார்ட்டா?
Iran and Saudi

அதேபோல் கடந்த 25ம் தேதி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகத்தைத் தொடர்புக்கொண்டு பேசியது. இருநாடுகளும் இஸ்ரேல் – காசா போர் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

இப்போது சில விஷயங்கள் குறித்து ஈரானும் சவுதியும்தான் விவாதித்து வருகின்றன. ஆகையால், சவுதி தற்போது அமெரிக்காவைவிட ஈரானிடமே நெருக்கம்காட்டி வருவதால், ஈரானின் திட்டம் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைந்தால், உலகப்போர் வெடிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com