இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து, நாட்டை விட்டு வெளியேறிய ஹிஸ்புல்லா அமைப்பு!

Isreal Vs Kaza
Isreal Vs Kaza
Published on

இஸ்ரேல் காசா போரினால், தற்போது தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இஸ்ரேலின் கோரமான தாக்குதலுக்கு பயந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று கோலான் ஹைட்ஸ் வட்டாரத்தில் உள்ள மஜ்டால் ஷாம்ஸ் நகரைத் தாக்கியதில் 12 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்தப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி என்பதால், இஸ்ரேல் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் இருந்தது.

இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் யோவாவ் காலன்ட், “எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவோம்,” என்று சூளுரைத்தார். இந்த எச்சரிக்கை இப்போரை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஃபாலாக்-1 என்னும் ஈரானிய ராக்கெட்டை தமது எல்லைக்குள் வீசி லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால், அந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.

அதன்படி, ஹிஸ்புல்லா இயக்கம் எதிர்பார்த்ததுபோலவே தென் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும் என்று லெபனான் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனால், போர் மிகவும் கடுமையாக மாறியுள்ளது. மேலும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் ஹிஸ்புல்லா படையினரில் சிலர் வெளியேறி இருப்பதாக அந்தப் படைக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Isreal Vs Kaza

அதேபோல், இஸ்ரேல் கோபத்துடன் தாக்க தொடங்கியுள்ளதால், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெய்ரூட் விமான நிலையம் சில விமானச் சேவைகளை ரத்து செய்து உள்ளது. லுஃப்தான்சாவின் யூரோவிங்ஸ் விமான நிறுவனமும் பெய்ரூட்டுக்கான மூன்று விமானங்களை திங்கட்கிழமை (ஜூலை 29) பிற்பகலில் ரத்து செய்தது. டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஞாயிறு இரவு இரு விமானச் சேவைகளை ரத்து செய்தது. இதுபோல போர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com