ஈவிபி சினிமாஸ் திரையரங்கில் வாரிசு பட கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹுலியம் கேஸ் பலூனில் பட்டாசு வெடித்த போது, அதில் நெருப்புப்பட்டு பலூன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளதால் இந்தாண்டு பொங்கல் பண்டிகை விஜய் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகி போனது.
தமிழகம் முழுவதும் படம் வெளியானது முதலே இருவரது ரசிகர்களும் கட்அவுட் பேனர் வைத்தும், பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி போய் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்த போது, ஹுலியம் கேஸ் பலூனில் நெருப்புப்பட்டு பலூன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 11 மணி அளவில் சென்னை பூந்தமல்லியை அடுத்ததிருமழிசை பகுதியில் இயங்கி வரும் ஈவிபி சினிமாஸ் என்ற திரையரங்கில் விஜய், அஜித் ரசிகர்கள் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்கத்தின் வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏ டி எம் கேஸ் பலூன் மீது கொண்டாட்டத்திற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு எதிர்பாராத விதமாக பட்டதில், கேஸ் பலூன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஜய் ரசிகர்கள், யாருக்கும் காயங்கள் ஏற்படாதவாறு உடனடியாக அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். பின்னர் இரு ரசிகர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஏ டி எம் கேஸ் பலூனை அங்கிருந்து வெளியேற்றினர்.