அயோத்தி ‘பால ராமர்’ சிலை புகைப்படம் வெளியீடு!

Bala Ram
Bala Ram

த்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள  பால ராமர் (குழந்தை ராமர்) மூலவர் சிலையின் புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த சிலை வருகிற 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பால ராமர் சிலையின் புகைப்படத்தை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

கருப்புநிற கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை நின்ற கோலத்தில் அமைந்துள்ளது. சிலையில் தங்கத்தினால் ஆன வில், அம்பு பொருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்து உருவாக்கிய 51 அங்குலம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயிலுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. கோயில் கருவறையில் வியாழக்கிழமை வைக்கப்பட்டது. மந்திர கோஷங்களுக்கு இடையே கருவறையில் சிலை வைக்கப்பட்டதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பால ராமர் சிலைக்கு அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, பிரதான சங்கல்பத்தை செய்துவைத்தார். அயோத்தி ராமர் கோயிலில் வருகிற 22 ஆம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்கு மறுநாள், அதாவது ஜன. 23 ஆம் தேதியிலிருந்து கோயில்  பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும்.

பால ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு 22 ஆம் தேதி பகல் 12-30 மணிக்குத் தொடங்கி 1 மணிக்குள் நிறைவடையும். சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கோயிலில் நடைபெற வேண்டிய சடங்குகள் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அயோத்தி ஸ்ரீராமர் சிலையை வடிவமைத்த சிற்பி யார் தெரியுமா?
Bala Ram

பால ராமர் சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 22-ம் தேதி ஆகம விதிகளின்படி சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com