

மீனவச் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்தியாவின் உயரிய குடிமைப் பணிகளுக்கான (Civil Services) போட்டித் தேர்வுகளை இனி எளிதாக எழுதலாம்.இதற்கான அறிவிப்பை ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பின்படி குடிமைப் பணிகளுக்கான (Civil Services) போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் கடலோர மற்றும் உள்நாட்டு மீனவ இளைஞர்களுக்கு இதை எதிர் கொள்ளும் வகையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்.இதை சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் (All India Civil Services Coaching Centre, Chennai) நடத்தும். இதற்கான அறிவிப்பு 12.11.2017 அன்று சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ஆணையின்படி, ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் இத் திட்டத்தின் கீழ் இலவசப் பயிற்சியின் பலனை பெற முடியும். மேலும்,இந்தத் திட்டம் மீனவ இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையான அறிவையும், திறன்களையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த அரிய வாய்ப்பை, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் ஆகியோருக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த பயிற்சி சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெறும். இது குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பிரத்தியேகப் பயிற்சியாகும். மீனவச் சமூக இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ இளைஞர்கள் மொத்தம் 20 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விருப்பம் உள்ள தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள், விண்ணப்பப் படிவத்தையும் (Application Form)ம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் (Guidelines) நாகப்பட்டினம்,சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் (Working Days) நேரில் சென்று விலையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 25.11.2025,மாலை 5.00 மணி ஆகும்.விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கூட மயிலாடுதுறை (இருப்பு) சீர்காழி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டம் சார்பான கூடுதல் விபரம் வேண்டுவோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தென்பாதி மெயின் ரோடு, எண்.41/யு, பெஸ்ட் பள்ளி எதிரில், சீர்காழி – 609111, தொலைபேசி எண்: 04364-271455.
தகுதியுள்ள மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.