ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலிலிருந்த ஐந்து இந்திய மாலுமிகள் விடுவிப்பு!

Isreal MSc Ship Seized by Iran
Isreal Ship

இஸ்ரேலின் சரக்குக் கப்பலை ஈரான் கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி கைப்பற்றியது. கப்பலில் இருந்த ஐந்து இந்திய மாலுமிகளை நேற்று விடுவித்ததாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் போர் ஆரம்பமானது. அதுவரை மறைமுகமாக காசா ஆதரவுபெற்ற ஹமாஸுக்கு உதவி செய்த ஹிஸ்புல்லாவிற்கு ஈரான் உதவு செய்து வந்தது. ஆனால், சமீபக்காலமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் நேரடி வெளிப்படை தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் MSC ஏரிஸ் கப்பல் கடைசியாக ஏப்ரல் 12 அன்று துபாய் கடற்கரையிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி பயணித்தது.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேலின் சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர  காவலர் படையினர் ஜலசந்தி அருகே கைப்பற்றினர். அந்தக் கப்பலில் 17 இந்திய மாலுமிகள் இருந்தனர். அதில் ஒருவர் மட்டும் ஏப்ரல் 18ம் தேதியே விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட உடனே அவர் கேரளாவுக்கு வந்தடைந்தார்.

மீதமுள்ள 16 இந்திய மாலுமிகளை விடுவிக்க இந்திய தூதரகம் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதனையடுத்து நேற்று மீதமுள்ள 16 இந்திய மாலுமிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் நேற்று மாலை இந்தியாவிற்கு திரும்ப தயாராவார்கள் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து இந்திய தூதரகம் X தளத்தில் பகிர்ந்துக்கொண்டதாவது, “ஈரானிய தூதரகத்தின் உதவிக்கு நன்றி. எம்எஸ்சி ஏரிஸில் உள்ள 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டு இன்று மாலை ஈரானில் இருந்து புறப்பட்டனர். பந்தர் அப்பாஸில் உள்ள தூதரகம் மற்றும் இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புக்காக ஈரானிய அதிகாரிகளைப் பாராட்டுகிறோம்". என்று தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்:
வாராணசியில் மே 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் பிரதமர் மோதி!
Isreal MSc Ship Seized by Iran

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்ரேல்-ஈரான் போர் பற்றிய வெளிப்படையான கருத்துக்களை இதுவரை தெரிவித்ததில்லை. ஆகையால், முடிந்த அளவு நட்புறவுடன் இருப்பதாலேயே ஈரான் அரசு இந்திய மாலுமிகளை பத்திரமாக அனுப்பி வைக்கிறது. இன்னும் மீதமுள்ள இந்திய மாலுமிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com