வாராணசியில் மே 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் பிரதமர் மோதி!

Prime minister Modi
Modi
Published on

உத்திரபிரதேசத்தில் உள்ள வாராணசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மே 14ம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனையடுத்து அன்று, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்களுடன்  பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மே 7ம் தேதியில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.

பிரதமர் மோதியும் தனது வாக்கை செலுத்தினார். அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலை பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார், பிரதமர் மோதி.

அந்தவகையில் கடைசி கட்டத்தில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி உட்பட 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாராணசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அங்கு நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மே 14ம் தேதியுடன் முடிவடைகிறது.

வாராணசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வரும் 14-ம் தேதியில் படேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாராணசி வரவுள்ளார். அதே நாளில் அவரது ’ரோடு ஷோ’ வாராணசியில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரஷ்யா: ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபரானார் விளாடிமிர் புதின்!
Prime minister Modi

மேலும் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.

மே 14ம் தேதி மோதி தனது வேட்புமனுவை சமர்ப்பிக்கவுள்ளார். அந்தப் பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ். ராஜலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com