ஆவின் பாலில் " ஈ" : ஊழியர்கள் மேல் நடவடிக்கை

ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்
ஆவின்
ஆவின்

மதுரையில் பொதுமக்களில் ஒருவர் வாங்கிய ஆவின் பாலில் "ஈ " இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஆவின் நிர்வாகத்துக்கு உடனடியாக தனது புகாரை அளித்துள்ளார்.  இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆய்வில் ஆவின் நிர்வாகம் சம்பந்த பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

 மதுரை ஆவின் நிறுவனத்தில் நாளொன்றுக்கு சுமாா் ஒன்றரை லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவற்றில் ஒரு லட்சம் லிட்டா், பால் பாக்கெட்டுகளாகவும், எஞ்சியவை பால் உப பொருள்களாகவும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. பசும்பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால், டீ மேட் என 4 வகையான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை குறைக்கப்பட்டதையடுத்து அதன் விற்பனை அதிகரித்து வருகிறது.

ஆவின் மில்க்
ஆவின் மில்க்

 இதனிடையே, மதுரையை அடுத்த வடபழஞ்சியில் உள்ள ஆவின் டெப்போவில், அப்பகுதியைச் சோ்ந்த பெண் புதன்கிழமை வாங்கிய அரை லிட்டா் பால் பாக்கெட் நிலைப்படுத்தப்பட்ட பாலில் ஈ மிதந்துள்ளது. அதையடுத்து அந்த பாக்கெட்டை அவர் டெப்போ முகவரிடம் ஒப்படைத்தாா்.

 இதுகுறித்து தகவலறிந்த ஆவின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டெப்போவிற்கு சென்று சம்பந்தப்பட்ட பால் பாக்கெட்டை ஆய்வு செய்தனா்.

பாலில் "ஈ"  இருந்த விவகாரத்தில் இதனை சரிவர கவனிக்காத ஆவின் துணை மேலாளர் சிங்காரவேலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் பாக்கெட்டுகளை பாக்கிங் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூபாய் 10000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com