

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்த வால்மார்ட்டுக்கு சொந்தமான மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) திட்டமிட்டுள்ளது. இதற்காக தனி மொபைல் செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மற்றும் இணைய வசதி பெருக்கத்தால் ஆன்லைன் ஷாப்பிங் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப்பரிமாற்று முறைகள் மற்றும் விரைவான விநியோக சேவைகள் (Quick Commerce) இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதும் சாதக அம்சமாகும்.
ஆர்டர் செய்யும் பொருள்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படுவது, 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் பொருள்களைத் தேர்வு செய்யும் வசதி இருப்பது இதில் உள்ள சாதக அம்சமாக மக்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களைச் சிறந்த தள்ளுபடியுடன் வாங்க அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் பிரசித்தி பெற்றவை.
இதில் பிளிப்கார்ட், நாட்டின் மிக முக்கியமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மொபைல்கள், மின்னணு சாதனங்கள், மற்றும் ஃபேஷன் உடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான தயாரிப்புகளும் கிடைக்கின்றன. நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கலாம். அதுமட்டுமின்றி அனைத்து வகையான பொருட்களையும் சிறந்த தள்ளுபடிகளுடன் உங்கள் Flipkart Home இணையதளம் அல்லது Flipkart Play Store செயலி மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்.
அந்த வகையில், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை நேரில் சென்று வாங்க வேண்டிய அவசியமின்றி, ஆன்லைன் மூலமாகவே வாங்கிடும் வகையில் பிளிப்கார்ட் விற்பனை மற்றும் டெலிவரி சேவையை வழங்கி வருகிறது.
இதுவரை வீட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் டெலிவரி செய்து வந்த பிளிப்கார்ட் அடுத்தகட்டமாக உணவு டெலிவரியில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது.
அதாவது இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்த பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், Zomato மற்றும் Swiggy போன்ற ஏற்கனவே நிலைபெற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கவுள்ளது.
அடுத்தகட்டமாக உணவு டெலிவரியில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இது குறித்து பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘இந்தியாவின் இ-காமர்ஸ் தொழில் நீண்ட தூரம் வந்துள்ளது. எண்ணிக்கை தற்போது கோடிக்கணக்கில் உள்ளது.
அதனால் தங்கள் நிறுவனம் ஒரு முன்னோட்டத் திட்டமாக உணவு விநியோகத் துறையில் களம் இறங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் சேவையை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.
புதிய உணவு விநியோகச் சேவையானது, பிரதான பிளிப்கார்ட் செயலியிலும் மற்றும் ஒரு தனிச் செயலி மூலமாகவும் கிடைக்கும். இந்தச் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன், முதலில் இதனை பெங்களூருவில் தொடங்க பிளிப்கார்ட் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்குள் சேவையை தொடங்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தச் சோதனை முயற்சியைத் தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக தனி மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இருப்பினும், இந்தச் சேவையின் பெயர் மற்றும் அது செயல்படத் தொடங்கும் முதல் நகரம் குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் Zomato, Swiggy நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகிறது. அதாவது, Zomato சுமார் 57 சதவீதப் பங்கையும், Swiggy 43 சதவீதப் பங்கையும் கொண்டிருந்தன.
உணவு டெலிவரி சந்தையில் பிளிப்கார்ட்டின் இந்த வருகை, இந்தியாவின் உணவு விநியோகச் சந்தையை மேலும் போட்டி நிறைந்ததாக மாற்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.