33,000 அடி உயரத்தில் திக். திக்..நொடிகள்..விமானத்தில் 174 பேரின் உயிரை காப்பாற்றிய ‘ரியல் ஹீரோ’..!!

விமானத்தில் இருந்த 174 பயணிகளையும் சாதுர்யமாகவும் வீரத்துடனும் காப்பாற்றியதற்காக உலகளவில் ஸ்மித் மச்சருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Smit Machchhar, flydubai FZ1073
Smit Machchhar, flydubai FZ1073image credit-@JasADRxquisites
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற Flydubai விமானத்தில் (FZ1073) காக்பிட் எனப்படும் விமானியின் அறையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் நகரை சுற்றிப்பார்ப்பதற்காக வந்திருந்த ஏராளமான இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தாயகம் திரும்புவதற்காக எமிரேட்ஸ் ஏல்லைன்சின் துணை நிறுவனமாக ‘பிளைதுபாய்’ (flydubai FZ1073) விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று துபாய் சர்வதேக விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் தலைநகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட flydubai FZ1073 விமாத்தில் 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்த விமானத்தை இந்தியாவை சேர்ந்த தலைமை கேப்டர் ஸ்மித் மச்சர் (Smit Machchhar) மற்றும் துணை விமானியாக ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு நபரும் இயக்கினர்.

விமானம் புறப்பட்டு இரண்டரை மணி நேரத்தில் ஜோர்டான் வான்பரப்பில் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் அந்த பயங்கர சம்பவம் நடந்தது.

அதாவது ஓமன் நாட்டை சேர்ந்த அந்த துணை விமானி திடீரென தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்திய விமானி ஸ்மித் மச்சரை வெறித்தனமாக குத்தினார்.

திடீரென நடந்த இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ஸ்மித் மச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதனை தொடர்ந்து அந்த கொடூர துணை விமானி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்ல சதி செய்து விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்வதற்காக 30 விநாடிகளிலேயே 14,000 அடிக்கு விமானத்தை இயக்கினான்.

flydubai FZ1073
flydubai FZ1073image credit-journalrecord.com

அதாவது விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு நிமிடங்களுக்குள் 17,400 அடி வரை கீழ்நோக்கிச் சரிந்தது. இதனால் விமானத்தில் இருந்த 170 இஸ்ரேலிய பயணிகளும் மரண பயத்தில் அலறினர்.

அதேசமயம் படுகாயமடைந்த நிலையிலும் மனவுறுதியுடன் செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் முடிந்தவரை விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த துணை விமானியுடன் கடுமையாக போராடினார்.

அதேசமயம் விமானம் கடத்தப்படுவதைக் குறிக்கும் '7500' அவசரக் சிக்னலை அனுப்பி, கேப்டன் காக்பிட் கதவை திறக்க, உடனே விமானத்தில் இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கி பிடித்து கயிற்றால் கட்டினர்.

பின்னர் காயமடைந்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சர் மற்றும் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்களின் சாதுரியத்தால் விமானம் சவுமி அரேபியாவின் தபூர் (Tabuk) விமான நிலையத்தில் அவசரமாக, பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்டி வைக்கப்பட்ட ஓமன் நாட்டு துணை விமானியை சவுதி அரேபிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

பயணிகள் மற்றும் விமானத்திலிருந்த மற்றவர்களின் துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தற்போது காயமடைந்த பைலட்டுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த 174 பயணிகளையும் சாதுர்யமாகவும் வீரத்துடனும் காப்பாற்றியதற்காக உலகளவில் இந்திய விமானி ஸ்மித் மச்சருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடுக்கடலில் வானில் அரங்கேறிய இந்த பயங்கரவாத சதி முறியடிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், 2011-இல் பன்னா (Panna) என்ற இடத்தில் 174 பயணிகளுடன் பறந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டபோதும் விமானியின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானிகளின் இந்த அஞ்சா நெஞ்சமும், அவசரகால சமயத்தில் அவர்கள் எடுக்கும் துல்லியமான முடிவுகளுமே பல நூற்றுக்கணக்கான உயிர்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகின்றன!

இந்த சம்பவம் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மச்சாரை ‘உண்மையான நாயகன்’ என்று பாராட்டினார். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த போதிலும், அவர் எதிர்த்து போராடி, தாக்குதலை முறியடித்தால் வானில் நிகழவிருந்த பெரும் பேரழிவு தடுக்கப்பட்டது.

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாட்டினர் உட்பட 174 பேரின் உயிரை அவர் காப்பாற்றினார். கேப்டன் மச்சார் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன்.

அவர் ஒரு உண்மையான நாயகன். அசாதாரணமான துணிச்சலைக் வெளிப்படுத்திய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு எனது வணக்கங்கள்’ என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com